Baakiyalakshmi: பாக்கியாவை மட்டுமல்ல ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழ வைத்த எழில்.. அதிர்ச்சியில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி எழிலிடம் மிரட்டியதால் பாக்கியா தன்னுடைய பட பூஜையில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழில் கூறியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக பாக்கியாவிற்க்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது என்பது போல பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. பாக்யாவை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கோபி சபதம் எடுத்து பல சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.

இதில் இருந்து பாக்கியா தப்பிப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய சூழ்ச்சியால் செழியன் மற்றும் இனியாவை தன் வசப்படுத்தி இருக்கிறார். இனியா எத்தனை முறை அவமானப்பட்டாலும் பிரச்சனையில் சிக்கினாலும் திருந்தாமல் பாக்கியவை உதறி தள்ளி விட்டு கோபியோடு சேர்ந்து இருக்கிறார்.
அதுபோல இப்பொழுது எழிலையும் பாக்கியாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று கோபி முயற்சி செய்திருக்கிறார். அதாவது எழில் புதியதாக படம் இயக்க இருக்கும் நிலையில் ஒரு புரொடியூசர் இடம் தன்னுடைய மகனுக்காக முதலில் பேசிய கோபி தன்னுடைய மகன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்று தான் எழிலுக்காக பேசியிருக்கிறார்.

அதாவது எழில் படத்திற்கான பூஜை நடக்கும் இடத்தில் பாக்கியா வரக்கூடாது என்று ப்ரொடியூசர் மூலமாக கோபி எழிலிடம் சொல்ல சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் எழிலிடம் உங்க அம்மா இந்த பட பூஜைக்கு வந்தால் உனக்கு படமே கிடையாது. நீ வாழ்க்கையில் படமே பண்ண முடியாது என்று மிரட்டுகிறார்.
இதனால் அதிர்ச்சியில் எழில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவசர அவசரமாக ஓடிவரும் பாக்யா எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா நான் கரெக்டான நேரத்திற்கு வந்துவிட்டேனா? வா உள்ளே போகலாம் என்று கையை பிடித்துக் கொண்டு பூஜை நடக்கும் இடத்திற்கு கூட்டி செல்ல எழில் நீ வர வேண்டாம் நீ வந்தா எனக்கு படபூஜை நடக்காது நீ வெளியே போமா என்று சொல்ல இதை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா வாசலில் நின்று அழுது கொண்டிருக்கிறார்.

கோபி தான் ஜெயித்து விட்டதாக சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் படத்திற்கான பெயர் திறந்து வைக்கப்படுகிறது. அங்கு பாக்கியலட்சுமி என்று பெயரில் தான் எழில் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இதை வெளியே இருக்கும் போர்டில் பார்த்த பாக்கியா கதறி அழுது கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ பார்க்கும் ரசிகர்களையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications