பாக்கியலட்சுமி சீரியல் ராமமூர்த்தி இத்தனை ஹிட்படங்களில் நடித்திருக்கிறாரா?வெளியான குடும்ப புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியாக நடிக்கும் நடிகர் எஸ்டிபி ரோசரியின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்.டி.பி ரோசரி நடித்து வருகிறார்.
திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் தன்னுடைய குடும்பத்தோடு நடிகர் எஸ்டிபி ரோசரி எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பெண்கள் பாராட்டும் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்று பெண்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. ஒரு குடும்பப் பெண் தன்னுடைய அடையாளத்தையும் சுய கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடும் போராட்டத்தை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது. கதையின் கதாநாயகியாக பாக்யா இருக்கும் நிலையில் அவருக்கு பக்கபலமாக அவருடைய மாமனார் மற்றும் இளைய மகன் இருந்து வருகிறார்.

திருநெல்வேலிக்காரர்
பாக்கியாவின் மாமனாராக ராமமூர்த்தி என்கிற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் எஸ்.டி.பி ரோசரி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையின் அப்பாவாகவும் நடித்து வரும் இவர் உடைய சொந்த ஊர் திருநெல்வேலி தானாம். அவருடைய சொந்த ஊரில் அவருடைய அம்மா, அக்கா அனைவரும் வசித்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் அங்கே சென்று தன்னுடைய உறவினர்களை சந்தித்து பக்கா கிராமத்துக்காரராக மாறி அடிக்கடி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

துணை இயக்குனர்
மருமகள் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து சொந்த மகனையே எதிர்த்துக் கொண்டிருக்கும் ராமமூர்த்தியை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு மாமனார் அப்பா ஸ்தானத்தில் நமக்கு இல்லையே என்று பல பெண்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இவருக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் என்ற தகவல்களும் அவரே வெளியிட்டு இருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நாடக கலைஞரும் ஆவார். சன் டிவியில் ஒளிபரப்பான வசூல் சக்கரவர்த்தி என்ற தொடரில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

படங்களிலும் நடிப்பு
அது மட்டுமில்லாமல் 1993 ஆம் ஆண்டில் இருந்து பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதுவும் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ராஜா மகன், அமைதிப்படை, தோழர், பாண்டி, வீரப்பதக்கம் என்று பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதோடு தற்போதைய தனுஷ், சிம்புவுடன் கூட இவர் நடித்திருக்கிறார். அதுவும் பொல்லாதவன், தொட்டி ஜெயா போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சாந்தி நிலையம் வெற்றியை தொடர்ந்து இவர் பாலச்சந்தர் கையால் தன்னுடைய முதல் விருதை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் பல வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் நம்ம ராமமூர்த்தி தாத்தாவா இது எப்படி இருந்திருக்கிறார் என்று வியந்து பாராட்டி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications