பாக்கியலட்சுமி சீரியல் செல்வியின் மகன் இந்த பிரபலமா? வெளிவந்த பல தகவல்கள்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய குடும்ப புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டர்களின் படியே பிரபலமடைந்து வருகின்றனர். அதில் கதாநாயகியாக பாக்கியா இருந்தாலும் கதாநாயகிக்கு துணையாக இருந்து வரும் செல்வி கேரக்டரும் அதிகமாக இப்போது ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து இருக்கிறார்.

இந்த வகையில் பாக்கியலட்சுமி செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா இந்த சீரியலில் இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யாவின் சித்தி ஆகவும் குடும்பத்திற்குள் பிரச்சினையை செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் நபராகவும் நடித்து வருகிறார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் போது இவருடைய குரலை வைத்தும், இவருடைய உடல் மொழியை வைத்து பலர் கலாய்த்து வந்தனர். ஆனால் இப்போது அதிகமானோர் இவருடைய கேரக்டரை பாராட்டி வருகின்றனர். தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கிறார் இவர் சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்
கம்பம் மீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து வைத்து விட்டார்களாம்.பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். பிறகு குடும்ப சூழ்நிலையால் இவர் எல்ஐசி ஏஜெண்டாக வேலைக்கு செய்து இருக்கிறார். அப்போதுதான் இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலின் மூலமாக இவர் பிரபலமடைந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு தமிழில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி, சகுனி போன்ற திரைப்படங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் கம்பம் மீனா தன்னுடைய குடும்ப புகைப்படத்தையும் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய மகனுக்கு திருமணம் முடிந்த புகைப்படங்களும், மருமகள் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். கம்பம் மீனாவின் மகன் பிசினஸ் செய்து வருவதாகவும், சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் ரவீந்தர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் லைவில் ரசிகர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது அதில் கலந்து கொண்ட கம்பம் மீனாவின் மகன் தன்னை பற்றி பல தகவல்களையும் அதில் தெரிவித்து இருந்தார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications