பாக்கியலட்சுமி: ராமமூர்த்தியின் அஸ்தியை வைத்து செழியன் சொன்ன வார்த்தை.. கோபத்தில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 11ஆம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தியின் அஸ்தியை வீட்டில் வைத்து மொத்த குடும்பத்தினரும் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி தனக்கு எதிராக குடும்பத்தினர்கள் செய்த செயலை நினைத்து கோபத்தில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழிலும் செழியனும் ராமமூர்த்தியின் அஸ்தியை வீட்டிற்கு கொண்டு வருகின்றனர். அஸ்தியை பார்த்து எல்லோரும் அழுகின்றனர். பிறகு விளக்கேற்றி வைத்து அஸ்திக்கு பூஜை செய்யும் போது ஈஸ்வரி கதறி அழுது கொண்டிருக்கிறார். இனியா எனக்கு தாத்தாவை இப்பவே பார்க்கணும் போல இருக்கு என்று அழுது கொண்டிருக்க எழில் ஆறுதல் சொல்கிறார். நேற்று வரைக்கும் என் கூட சந்தோஷமா வாழ்ந்தவரை இன்னைக்கு சாம்பலா பார்க்கும் போது மனசு பதறுது என்று ஈஸ்வரி அழுகிறார்.

எழில் அந்த அஸ்தியை எடுத்துக்கொண்டு கரைக்க சென்று விடுகிறார். பிறகு அஸ்தியை கரைத்து விட்டு எழில் செழியனிடம் தாத்தா அவரோட பிறந்தநாளில் எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினாரு. ஆனா அது தான் கடைசி பேச்சா இருக்கும்னு எனக்கு தெரியலையே ஒரே நாளில் எல்லாமே முடிஞ்சு போச்சே என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு செழியன் எனக்கு முதலில் குடும்ப பொறுப்பு பற்றி எதுவுமே தெரியல.
தாத்தா சொல்லியும் நான் அதை பெருசா எடுத்துக்கல. ஆனா எனக்குன்னு ஒரு பிரச்சனை வந்தபோதுதான் என் குடும்பம் நின்னாங்க. அதுக்கு பிறகு தான் நான் நல்லா குடும்பத்தை பாத்துக்கணும்னு தோணுச்சு. என் குடும்பத்துக்கு மூத்தவனா நான் நல்லா பார்த்துப்பேன். நீ என் தம்பி டா உன்னை நான் நல்லா பார்த்துப்பேன் என்று கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் அழுது கொண்டிருப்பதை பார்த்து பழனிச்சாமி மற்றும் ஜோசப் இருவரும் செழியன் மற்றும் எழிலுக்கு ஆறுதல் சொல்கின்றனர். உங்க தாத்தா எங்கேயும் போக மாட்டாரு உங்க குடும்பத்தோட உங்க கூடவே தான் ஏதாவது ஒரு இடத்தில் இருப்பாரு. நீங்கதான் பெரியவங்களை சமாதானப்படுத்தணும் நீங்களே இப்படி அழுது கொண்டு இருந்தா எப்படி என்று அவர்களை அங்கிருந்து சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூப்பிட்டு செல்கின்றனர்.

மறுபக்கத்தில் கோபி தான் வாங்கிக் கொண்டு வந்த அஸ்தியை கரைத்து விட்டு ராதிகாவிடம் நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாங்கன்னு தெரியல. எனக்கு எங்க அப்பா அம்மா அவ்வளவு பிடிக்கும். நான் பிறந்ததிலிருந்து அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருந்தேன். அவங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக எனக்கு பிடிக்காத வாழ்க்கையை ஏத்துக்கிட்டு எல்லாரையும் நல்லா பாத்துகிட்டேன்.

அந்த பாக்கியாவை கூட நான் நல்லாதான் பாத்துக்கிட்டேன். ஆனால் இப்போ எனக்கு புடிச்ச வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தது ஒரு தப்பா? எதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாங்க என்று ராதிகாவிடம் அழுது கொண்டிருக்கிறார். அதோடு இந்த உலகத்தில் நான் ரொம்ப நேசித்தது எங்க அம்மா தான். ஆனா எங்க அம்மாவே இப்படி நடந்துக்குவாங்கன்னு நினைக்கல.

இதுவரைக்கும் எங்க அம்மா நான் சிரிச்சா அவங்க சிரிப்பாங்க. நான் அழுதா அவங்க அழுவாங்க. ஆனா அவங்க இப்போ ரொம்ப மாறிட்டாங்க. என்னை எங்க அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யவிடாமல் தடுத்துட்டாங்க. இவ்வளவு நாளா எனக்கு பாக்கியா தான் பிடிக்காம இருந்தா. ஆனா இப்போ அந்த பாக்கியாவை விட எங்க அம்மாவ அதிகமா வெறுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா இப்பவாவது உங்க அம்மா மனதில் இருக்கிற வன்மம் உங்களுக்கு தெரிஞ்சதே அதுவே போதும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications