பாக்கியலட்சுமி: மீண்டும் பழைய கதையே.. ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த கோபி.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீண்டும் ஈஸ்வரி இடம் வந்து பேசுகிறார். அப்போது தன் மீது எந்த தப்பும் இல்லை நீங்கதான் எனக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டு இருக்கீங்க என்று கோபி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழில் வீட்டிற்கு செழியன் வந்து இருக்கிறார். செழியனை பார்த்ததும் எழில் ரொம்பவும் சந்தோஷப்பட பிறகு எல்லோரும் சேர்ந்து பிரியாணி சாப்பிடுகின்றனர். அப்போது செழியன் எழிலை நினைத்து பெருமையாக இருப்பதாக சொல்கிறார். வீட்டில் உனக்கு பிடிக்காத விஷயம் நடந்த போது நீ யார் மீதும் எந்த குறையும் சொல்லாமல் வீட்டை விட்டு வந்திருக்கிற உன் கனவுகளே ஜெயித்து விட்டு இனி மீண்டும் சீக்கிரமாக வீட்டிற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதோடு வீட்டிற்கு தேவையான டிவி முதலிய சில பொருட்களை எழில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்போது எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபியும் அங்கு வருகிறார். கோபியை பார்த்ததும் எழில் முகம் மாறுகிறது. பிறகு எழிலிடம் கோபி உன்னுடைய அம்மா தான் உன்னை வெளியே அனுப்பிவிட்டா. அந்த வீட்டை அவள் பெயருக்கு மாற்றுவதற்காக உன்னை பிளான் பண்ணி வெளியே அனுப்பிட்டா என்று சொல்ல, எழில் கோபப்பட்டதும் சரி விடு நான் இதுக்கு மேல பேசல என்று ஜகா வாங்குகிறார்.

பிறகு நிலா கையில் பணத்தை கொடுக்க அதை எழில் வாங்க கூடாது என்று சொல்கிறார். அதற்கு கோபி இது என் பேத்திக்கு நான் கொடுப்பது என்று உரிமையாக சொன்னதும் அமிர்தா எழிலை தடுக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி செல்ஃபோனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதில் வெற்றி பெற்ற பாடகி பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு பாக்யா ஒரு பிள்ளை வெற்றி பெற்றால் பெற்றோர்கள் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுவாங்க. இதுவரை பேசாமல் இருந்த சொந்தங்கள் எல்லாம் இப்ப வந்து பேசுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியாவிற்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. நான் தாத்தா சொன்னது போல ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பில் இருந்திருக்கேன். இப்போ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி ஜெயிக்கப் போகிறேன் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

television baakiyalakshmi serial vijay tv

அதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். பிறகு ஜெனி பாடி காட்டு என்று சொல்ல இனியா பாடிய பாடலை கேட்டு எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஜெனி வேற ஏதாவது ட்ரை பண்ணுவோம் இந்த முயற்சி வேண்டாம் என்று சொல்லி முடிக்க இனியா செல்லமாக கோபப்படுகிறார். பிறகு நான் எப்படி காலேஜுக்கு போவது என்று இனியா கேட்க பாக்யா நான் விடுகிறேன் என்று சொல்கிறார்.

செழியன் நான் கொண்டு விடுகிறேன் என்று சொல்ல எதுவும் வேண்டாம் நான் கொண்டு விடுகிறேன் என்று ஈஸ்வரி இனியாவே கூட்டிக்கொண்டு வீட்டு வாசலுக்கு வருகிறார். அப்போது அந்த பக்கமாக வந்து கோபி இனியாவை தன்னோடு வருமாறு கூப்பிடுகிறார் அதற்கு ஈஸ்வரி கோபப்படுகிறார். உடனே இனியா பாட்டி வீட்டிற்குள் இருப்பதற்கு கஷ்டமாக இருக்கும் அதனால் வெளியே வரட்டும் என்று நான் ஆட்டோவில் போறேன் என்றும் சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு சரி என்று கோபி இனியா ஆட்டோவிற்கு பின்னாடியே காரில் காலேஜுக்கு வருகிறார். அங்கு வந்து ஈஸ்வரியிடம் மனம் நொந்து பேசுகிறார். அம்மா நீங்க ஜெயிலுக்கு போனது எனக்கு தெரியாம நடந்த ஒரு விஷயம். அதுக்காக என்ன இவ்வளவு கேவலப்படுத்திரிங்க. நான் உங்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று நினைக்கிறீர்களா அம்மா, நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன் அதெல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியாதா?

நான் பண்ணுன தப்பு மட்டும் தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரிகிறதா? என்று கோபி பேசிக் கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி ஆட்டோவில் ஏறப்போகும் போது நான் இதுவரைக்கும் என்னுடைய அம்மா தான் எனக்கு உலகம் என இருந்திருக்கேன். உங்களுக்கு ஒன்னுனா நான் துடிச்சு போயிருவேன் அம்மா என்று சொல்ல ஈஸ்வரி நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

போனவாரம் முழுக்க எனக்கு பாக்யாவை விட எங்க அம்மா ஈஸ்வரி தான் எனக்கு பெரிய எதிரி. என்னுடைய அப்பாவிற்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்துவிட்டார் என்று வீர வசனம் பேசிய கோபி இப்போது மீண்டும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரி மனம் மாறுமா? இல்லையா? என்பது இனி தான் தெரியவரும். ஏற்கனவே இந்த சீரியலில் வந்து கதை அடிக்கடி வருவது வழக்கம்தான். இப்போது மீண்டும் பழைய கதை தொடங்கி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+