ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்த பாக்யா.. இனியா கேட்ட கேள்வி.. ஆடிப்போன கோபி.. ஈஸ்வரியின் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தியின் உடலுக்கு பாக்கியா இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி ஒட்டுமொத்த குடும்பத்தையும் எதிர்த்து சண்டையிடுகிறார். இறுதியில் இனியா சொன்ன ஒரே வார்த்தையால் கோபி அமைதியாகி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு முழுக்க ராமமூர்த்தியின் உடலுக்கு யாரு கொள்ளி வைப்பது என்ற சண்டை தான் நடந்தது. கோபி ராமமூர்த்தியின் உடலுக்கு கொள்ளி வைக்க கூடாது என்று ஈஸ்வரி சொன்னதால் கோபி ஈஸ்வரியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். எனக்காக விட்டுக் கொடுத்திருங்க அம்மா ஒரு பையனாக காலம் முழுக்க என்னை அந்த குற்ற உணர்ச்சியில் சாக முடியாது என்று கோபி காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதற்கு கமலா பெத்த பையனுக்கு அந்த உரிமை இல்லை என்று சொல்லிட்டு நீங்க உங்க புருஷனுக்கு இறுதி சடங்கு செய்ய போறீங்களா? இது என்ன ஊர் உலகத்துல இல்லாத சட்டம் எல்லாம் நீங்க பேசுறீங்க என்று சண்டைக்கு நிற்க, அதற்கு ஈஸ்வரி நீ இங்கே இருக்கிறதா இருந்தா இரு, இல்லை என்றால் வெளியே போ... இங்கே இருக்கிறவங்க யார் என் முடிவுக்கு சம்மதிக்கவில்லை என்றாலும் தாராளமாக வெளியே போகலாம் நான் யாரையும் இங்கு இருக்க வேண்டும் என்று சொல்லி கெஞ்சல.

நான் தனி ஆளா இருந்து என்னுடைய புருஷன் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய இறுதி சடங்கு நடக்கணும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லுகிறார். அதற்கு கோபி விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டே இருக்க கோபியை பழனிச்சாமியும் ஜெனியின் அப்பாவும் சமாதானம் செய்து அவரை வெளியே கூட்டிட்டு வந்து பேசுகின்றனர். ஆனாலும் கோபி தன்னுடைய முடிவில் இருந்து மாறாமல் என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகா பையன் சடங்கு பண்ணவில்லை என்றால் இந்த சடங்கை எல்லாம் யாரு பண்ணுவாங்க? என்று கேட்டதும் ஈஸ்வரி இந்த சடங்கு எல்லாம் எங்களுடைய மகள் பாக்கியா பண்ணுவா என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார். அதோடு நேற்று அவருடைய பிறந்த நாளை அவள் தான் ஞாபகம் வச்சு கொண்டாடினா. சிலர் அப்பாவின் பிறந்தநாள் கூட மறந்து போயிட்டேன்னு வந்து நின்னாங்க.

ஆனா பாக்கியா அவளுடைய ஆசை மகன் அவளை விட்டு பிரிஞ்சு போய் மூன்றாவது நாளே ஆகியிருந்த நிலையிலும் தன்னுடைய மாமா அத்தை சந்தோஷத்துக்காக அவருடைய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி இருந்தா. 18 வயசுல இந்த வீட்டுக்கு கல்யாணம் ஆகி வந்தா வந்த பிறகு அவர் நிம்மதியாகவே இருக்கல்ல. ஆனாலும் பாக்கியா இந்த வீட்டை விட்டு போகல.

baakiyalakshmi serial vijay tv

அவ புருஷன் அவளை ஏமாத்திட்டு போன பிறகு கூட அவ இந்த வீட்டை விட்டு போகல. அவனே போன பிறகு அவன் குடும்ப எதற்குனு எங்களை தூக்கி எறியல. அவ எங்களுக்கு ஒரு பொண்ணா இருந்து எல்லா கடமைகளையும் செஞ்சா. அதனால என் புருஷன் ஆசைப்பட்டபடி பாக்கியா தான் இறுதி சடங்கு செய்யணும் என்று சொல்ல, கோபி அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் இவ வீட்டை விட்டு போனா தெருவுல நிக்கணும் என்பதற்காக தான் வீட்டை விட்டு போகாமல் இவ்வளவு நாளா இந்த வீட்டுக்குள்ளே இருக்கிறா.

baakiyalakshmi serial vijay tv

இவா எல்லாரையும் நடிச்சு ஏமாத்தலாம் ஆனால் நான் இவ நடிப்புக்கு ஏமாற மாட்டேன். நான்தான் என்னுடைய அப்பாவுக்கு இறுதி சடங்கு செய்வேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க, அதற்கு கொஞ்சம் கூட காது கொடுக்காமல் ஈஸ்வரி இருக்கும்போது கோபி சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்த இனியா அப்பா தயவு செய்து விட்டுக் கொடுத்துடுங்க தாத்தாவுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கிறது பிடிக்காது என்று கையெடுத்து கெஞ்ச கோபி அமைதியாகி விடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

ஈஸ்வரி பாக்யாவிடம் உன்னுடைய மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நீ தான் இறுதி சடங்கு பண்ண வேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். வேறு வழியில்லாமல் ராமமூர்த்திக்கு பாக்யா கடமைகளை செல்கிறார். இன்றைய எபிசோடு முழுக்க சண்டை தான் இருந்தது. போன வாரமே ராமமூர்த்தி இறந்து விட்டார் ஆனால் அவருக்கு இன்னும் இறுதி சடங்கு நடத்தாமல் தத்ரூபமாக காட்சி இருக்க வேண்டும் என்று பார்க்கும் ரசிகர்களையும் மன அழுத்தத்தில் தள்ளி வருகிறார்கள். ஒரு வழியாக நாளை சனிக்கிழமை எபிசோடில் தான் ராமமூர்த்தியின் இறுதி சடங்கு முடிவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+