ராதிகாவை அழ வைத்துவிட்டு ஜெனி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.. குடும்பமே இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஜெனி, அமிர்தா, இனியா மூவரும் நிலா பாப்பாவோடு சிக்கு புக்கு ரயிலு விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.
இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் ராதிகாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே பாக்கியா தான் கதாநாயகியாக பலருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார். ஆனால் ஒரே நாளில் ராதிகா இப்போது மொத்த ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளி சென்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் ராதிகாவும், பாக்கியாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து பிறகு இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் கோபி செய்த சூழ்ச்சியால் எதிரியாக மாறிவிட்டனர். ஆரம்பத்தில் பாக்யா வெகுளி என்று கூறிக் கொண்டிருந்த ராதிகாவே கோபியின் பேச்சை கேட்டு பாக்கியா நடிக்கிறார், ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றிய அதிகமாக பேசி பலருடைய கோபத்தையும் திட்டல்களையும் ராதிகா வாங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது யாரும் எதிர்பாராத பல பரபரப்பான தருணங்கள் நடைபெற்று வருகிறது. வீட்டில் கீழே வழுக்கி விழுந்த ஜெனிக்கு உதவி செய்த ராதிகாவை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி நீதான் ஜெனியை கீழே தள்ளி விட்டாயா? என்று மனதை காயப்படுத்தி விட்டு, கோபி இடமும் ராதிகா தான் செய்தார் என்று ஏற்றிவிட்டு அதனால் கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பாக்யா ராதிகாவை புரிந்து கொண்டு ராதிகாவுக்கு நன்றி கூறி இருக்கிறார். இதனால் பாக்யாவும் ராதிகாவும் மீண்டும் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஜெனி, அமிர்தா, இனியா மூவரும் நிலா பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ராதிகாவை மாட்டி விட்டுவிட்டு வயிற்றில் குழந்தையோடு நீங்க இப்படி ஓடிப் பிடித்து விளையாடுறீங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications