மார்டனாக மாறி இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா..திடீரென்று டிரெண்டாகும் வீடியோ.. இவரா அவர்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி பாக்யா கேரக்டரில் நடிகை கே.எஸ் சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார்.
நடிகை சுசித்ரா பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் மாடர்ன் மனைவியாக நடிகர் இமான் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாக்யலட்சுமி நடித்த வீடியோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கதாநாயகி பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் குடும்ப தலைவியாக பாக்யா கேரக்டரில் நடிக்கும் சுசித்ராவிற்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் தன்னுடைய கணவன் தன்னை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு ஒரு மனைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் போராட்டம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

திரைப்படங்களிலும் நடிப்பு
இந்த நிலையில் இந்த சீரியலில் குடும்ப பெண்ணாகவும் பிரச்சனைகள் என்று வரும்போது புரட்சி செய்யும் தைரியமான கேரக்டரில் பாக்கியலட்சுமி இருந்து வருகிறார். இவரை அதிகமானோர் ரசித்து வரும் நிலையில், தற்போது இவர் நடித்த திரைப்படங்களின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே சைவம் என்ற திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருப்பார். அது பலருக்கும் தெரிந்ததுதான்.

மார்டன் மனைவி
அதுபோல உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் என்னும் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். பிரியதர்ஷினி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நிமிர் படத்தில் இமான் அண்ணாச்சிக்கு மனைவியாக பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா நடித்திருக்கிறார். அந்த சீரியலில் அந்தத் திரைப்படத்தில் இவர் மார்டன் மனைவியாக கலக்கி கொண்டு இருப்பார். இமான் அண்ணாச்சியோடு இவருடைய வாக்குவாதம் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

கோபி பார்த்தா என்ன ஆவது
இந்த நிலையில் இமான் அண்ணாச்சி மற்றும் சுசித்ரா நடித்த கிளிப்சுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்த ரசிகர்கள் இது யாரு நம்ம பாக்கியா அக்காவா? இப்படி எல்லாம் இருக்கிறார். இதை பார்த்தா கோபி என்ன ஆவர்னு தெரியலையே? ஏற்கனவே பழனிச்சாமி உடன் பாக்கியா பேசுவதை பார்த்தாலே புலம்பிக் கொண்டிருக்கிறார். இப்போது மார்டனாக மாறி இருக்கும் பாக்யாவை பார்த்தால் கோபி நிலைமை என்னாகும்? என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
