பாக்கியலட்சுமி டுவிஸ்ட்.. ராதிகாவை வாழ்த்தும் பாக்கியா.. சந்தோஷத்தில் ஆட்டம் போடும் இனியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

அதுவோடு இனியா உடன் சேர்ந்து காவாலயா பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Baakiyalakshmi Serial twist Baakiya congratulates Radhika and Iniya dances in happiness

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் கவர்ந்த சீரியல்களில் முன்னணி இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் தான் இருக்கிறது. அதற்கு காரணம் இந்த சிரியலில் பெண்ணின் முன்னேற்றம்தான் மையக்கருத்தாக இருக்கிறது.

குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியாவை தொடர்ச்சியாக கோபி அவமானப்படுத்தி அவருக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இருந்து நிலையில் கடைசியாக கோபி பாக்யாவை விட்டு பிரிந்து ராதிகாவை திருமணம் செய்த நிலையிலும் பாக்யா மனம் தளராமல் தான் எடுத்து வைக்கும் முயற்சிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial twist Baakiya congratulates Radhika and Iniya dances in happiness

இதனாலையே பாக்கியா பல பெண்களுக்கு ரோல் மாடலாகவும் மாறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த சீரியல் விறுவிறுப்பாகவும்,
கலகலப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லனாக இருக்கும் கோபி அவருடைய நடிப்பையும் தாண்டி எதார்த்தமாக செய்யும் செயல்கள் பலருடைய பாராட்டையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தன்னுடைய instagram பக்கத்தில் ராதிகா அதாவது ரேஷ்மாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். ரேஷ்மா உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பாக்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து இப்போது கோபியால் எதிரியாக மாறியிருக்கும் நிலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி பாக்கியா சுசித்ரா வேற லெவல் என்று நிரூபிச்சிட்டீங்களே சிலர் கூறி வருகின்றனர்.

Baakiyalakshmi Serial twist Baakiya congratulates Radhika and Iniya dances in happiness

அதோடு தற்போதைய சூழ்நிலையில் சீரியலில் மட்டும் தான் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் நிஜத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் இருக்கின்றனர். இந்த நிலையில் பாக்கியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல தொடர்ச்சியாக ராதிகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோல பாக்கியா இன்னொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதில் இனியாவும் பாக்கியாவும் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான "காவாலயா" பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கின்றனர். தமன்னாவிற்கு டப் கொடுக்கிற மாதிரி பலர் போட்டியாக டான்ஸ் போட்டு கொண்டிருந்தாலும் நாங்க புது விதமாக ஆட்டம் போட்டு இருக்கிறோம் என்று பாக்கியாவும் இனியாவும் புது விதமாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+