பாக்கியலட்சுமி சீரியலில் ஒரே நாளில் மாறிய இரண்டு நடிகைகள்.. இவருக்கு பதில் இவர்.. காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் இரண்டு கேரக்டரில் நடித்த நடிகைகள் மாற்றம் அடைந்து இருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஏற்கனவே அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த ரித்திகா விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் திடீரென்று விலகி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வருகிறது. அதுவும் குடும்ப தலைவியாக இருக்கும் ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டில் மட்டுமல்லாமல் சமுதாயத்திலும் பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
பல வீட்டில் பெண்களுடைய நிலைமை பாக்கியலட்சுமியின் நிலைமை போன்றே இருக்கிறது. அதனாலையே இந்த சீரியலுக்கு பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் இந்த சீரியலிலும் சில அபத்தங்கள் இருக்க தான் செய்கிறது. சிறந்த அம்மா என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கும் மகள் மருமகன் யாரையும் எந்த வேலையும் செய்ய விடாமல் பாக்கியலட்சுமி தன்னுடைய தலையில் அனைத்து சுமைகளையும் தாங்கிக் கொள்வது குறித்து பலரும் இருவேறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா சீரியலை விட்டு திடீரென்று விலகப் போவதாக ஒரு சில நாட்களாகவே இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அது குறித்து ரித்திகா எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதனால் இது ஒருவேளை வதந்தியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் இன்றைய எபிசோட்டில் ரித்திகாவிற்கு பதிலாக நடிகை அக்ஷயா அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வரும் நடிகை அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் செழியனின் கிளைன்ட் ஆக நடித்து வந்த நடிகை திடீரென்று இந்த சீரியலில் இருந்து இன்று வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை ரேமா அறிமுகமாகி இருக்கிறார். இரண்டு பேரின் மாற்றம் இன்றைய எபிசொட்டில் நடந்திருக்கிறது.
அதே நேரத்தில் இனி அமிர்தாவின் கேரக்டர் வில்லியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் ரித்திகா சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறபடுகிறது.. அதுபோல செழியனுக்கு இனி ரேமாவால் தான் பிரச்சனை வரப்போகுது என்றும் கதை போகிற போக்க பார்த்தால் தெரிகிறது. இதனால் இனி சீரியல் விறுவிறுப்பு அதிகரிக்குமா? என்று காத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications