பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப்போவது இதுதானா? லீக்கான போட்டோஸ்.. மீண்டும் முதலில் இருந்தா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியல் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் நல்ல டி ஆர்பி பெற்று கொண்டு இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் இந்த சீரியலில் பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் இன்னும் 1970 இல் உள்ள கதையே ரிப்பீட் மோடில் வந்து கொண்டே இருப்பது தான் வேதனையாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்க வைக்கும் வகையில் இந்த சீரியலில் பல கதைகள் இருக்கிறது.
அதாவது இந்த சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து விடுகிறார். ஆனால் பல அவமானங்களையும் தாங்கிக்கொண்டு பாக்கியா கோபியின் அம்மா அப்பாவோடு இருக்கிறார். அதிலும் கோபியின் அம்மா ஈஸ்வரி எப்போ எப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது.
ஒருநாள் கோபிக்கு சப்போர்ட் பண்ணுவார் இன்னொரு நாள் பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணுவார். இது பார்க்கும் ரசிகர்களையும் போதுண்டா சாமி என்று சொல்லும் வகையில் இருக்கிறது. ஈஸ்வரி மட்டுமல்ல பாக்கியாவின் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த சீரியலில் கோபியின் அப்பா ராமமூர்த்தியின் இறப்பு காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று ஒரு மாதமாக இறப்பு காட்சிகளை வைத்து எல்லோரையும் அழ வைத்துவிட்டார்கள்.
அதிலிருந்து இந்த சீரியலில் டிஆர்பி குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் இந்த சீரியலை பழைய நிலைக்கு கொண்டு வர வைக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால் இது ஏற்கனவே வந்த கதை தானே என்பது பார்க்கும் ரசிகர்களுக்கு அபாண்டமாக தெரிகிறது. ஏற்கனவே இனியா, ஈஸ்வரி, செழியன் மூன்று பேரும் கோபி தான் முக்கியம் என்று கோபி பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.

பிறகு சில பிரச்சனைகள் வந்ததும் பாக்கியாவை புரிந்து கொண்டு இனி உனக்குத் துணையாக இருப்போம் அம்மா என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது மீண்டும் கோபி பக்கம் திரும்பி விட்டார்கள். அதுபோல தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கோபி மீது பயங்கர கோபத்தில் இருந்த ஈஸ்வரி தன்னுடைய கணவரின் இறப்பின் போது கூட கோபியை கொள்ளி வைக்க கூடாது என்று தடுத்திருந்தார்.
ஆனால் இப்போது கோபி செய்த தப்புக்காக பாக்கியா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் மொத்த குடும்பத்தினரும் பாக்கியாவிற்கு எதிராக இருக்கின்றனர். இப்படியான நிலையில் தற்போது ஒரு புது புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது இந்த சீரியலில் செழியன் கேரக்டரில் நடிக்கும் விகாஸ் தான் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கோபி பாக்யாவின் வீட்டில் ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியாவோடு இருக்கிறார். ஏற்கனவே கோபி பாக்யாவிடம் வீட்டை விற்ற பிறகும் ஈஸ்வரி இரண்டு முறை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அதற்குப் பிறகு பல பிரச்சனைகள் வந்து வீட்டை விட்டு துரத்தி விட்டிருக்கிறார்கள். இப்போது கோபி மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் வந்திருக்கும் நிலையில் இதுக்கு முடிவே இல்லையா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications