பாக்கியலட்சுமியில் இனியா- ஆகாஷ் காதல் கதை வந்தது இதற்காக தான்.. அவ்ளோ கஷ்டம் இருக்கு! செல்வி ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக இனியா மற்றும் ஆகாஷ் விஷயங்களை வைத்து தான் கதை நகர்ந்து வருகிறது. இது குறித்து இந்த சீரியலில் செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மாதத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.

நெகட்டிவ் கமெண்ட்
இந்த சீரியல் முடிவுக்கு வருவது நல்லது என்று சிலர் இரண்டு வருடங்களாகவே கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். காரணம் இந்த சீரியலில் வந்த கதையே ரிப்பீட் மோடில் வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் இப்போது இந்த சீரியலில் கதை சூடு பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் வீட்டை விற்ற பிறகு கோபி மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்து கொண்டே இருந்தார்.

முடியாத தொடர்கதை
கோபி பாக்கியா வீட்டிற்கு வந்ததும் அவர் பின்னாடியே ராதிகாவும் வந்து கொண்டிருந்தார். இது அடிக்கடி நடப்பதால் ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இப்போது ராதிகா கோபியை வேண்டாம் என்று சொல்லி விவாகரத்து செய்து விட்டார். இதனால் கோபி பாக்யா வீட்டில் இருக்கிறார். அதே நேரத்தில் கோபியை பாக்கியா மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

கோபியின் மாற்றம்
அதுபோல கோபிக்கு உடல்நிலை சரியில்லாத ஒரே காரணத்திற்காக தான் வீட்டில் இருக்க பாக்கியா சம்மதித்திருக்கிறார். இந்த நிலையில் கோபியும் இப்போது பாக்யாவை புரிந்துகொண்டு இருக்கிறார். இப்படியான நிலையில் தான் யாரும் எதிர் பார்க்காத கதைகளம் வந்திருக்கிறது. அதாவது இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கும் காட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
திடீர் காதல் கதை
அதே நேரத்தில் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருக்கிறது. ஆரம்பத்தில் பாக்கியாவின் நண்பர் பழனிச்சாமி அக்கா மகனை தான் இனியா காதலிப்பது போன்று கதை நகர்ந்து வந்தது. இதை வைத்துதான் இவர்கள் வீட்டில் பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தால் இப்போது பழனிச்சாமி குடும்பத்தையே காட்டாமல் கழட்டிவிட்டு செல்வியின் மகனை இனியா காதலிப்பது போன்றும், அதனால் குடும்பத்தில் பிரச்சனை நடப்பது போன்றும் கதை சென்று கொண்டிருக்கிறது.

மக்களின் பாராட்டு
இந்த சீரியலில் செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனா இந்த சீரியல் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எனக்கு இந்த கதை வரும்னு தெரியாது. திடீர்னு தான் என்னுடைய மகனை தான் இனியா காதலிக்கிறார் என்று சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போ என்னுடைய நடிப்பை பார்த்துட்டு எல்லாரும் பாராட்டுறாங்க.

சிங்கிள் மதர்
இதற்கு முக்கிய காரணம் ப்ரீயா தம்பி மேடம் தான். இவங்க தான் இந்த சீரியலுக்கு ஸ்கிரீன் ப்ளே பண்றாங்க. இவங்களோட பிளானால்தான் இப்போது கதை மாற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடந்த சில சம்பவங்கள் என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. இரண்டு மகன்களை நான் சிங்கிள் மதராகத்தான் வளர்த்து எடுத்தேன்.

நிஜத்திலும் அவமானம்
இந்த சீரியலில் எப்படி ஆகாஷ் ரொம்ப நல்ல பையனா இருக்கிறாரோ அதேபோல என்னுடைய மகன்களும் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு திருமணம் முடிந்து பேரன், பேத்தி எல்லாம் எனக்கு வந்துட்டாங்க. இந்த சீரியலில் எப்படி செல்வி அவமானப்படுறாங்களோ இதே போல என்னுடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கு என்று எமோஷனலாக கம்பம் மீனா பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications