பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகியது பற்றி விளக்கம் கொடுக்காத விஷால்! புது எழில் போட்ட போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால் இன்றைய எபிசோடில் இருந்து விலகி இருக்கிறார். அது குறித்து அவர் எதற்காக விலகினார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அது பற்றி விஜே விஷால் விளக்கம் கொடுக்காமல் இருக்கிறார்.
அதே நேரத்தில் புதியதாக எழில் கேரக்டரில் கமிட் ஆகி இருக்கும் நடிகர் நவீன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2019 ஜூலை மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷாலுக்கு பதிலாக நடிகர் நவீன் இன்றைய எபிசோடில் இருந்து அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் கேரக்டராக எழில் கேரக்டர் இருக்கிறது. பாக்கியா கதாநாயகியாக இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து எழில்தான் பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார். இந்த சீரியலுக்கான விக்கிபீடியாவில் கூட பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவிற்கு அடுத்த இடத்தில் எழிலாக நடிக்கும் விஜே விஷால் பெயர் தான் இருக்கும்.

அதே நேரத்தில் விஜே விஷால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில ஷார்ட் பிலிம்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் எதற்காக இவர் சீரியலில் இருந்து திடீரென்று வெளியேறினார் என்பது எல்லோருக்கும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இது குறித்து விஜே விஷால் கடைசியாக நேற்று வெளியிட்ட போஸ்டில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் விஜே விஷால் இப்ப வரைக்கும் இது குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் கோபி, செழியன், ராமமூர்த்தி என எல்லோரோடும் சேர்ந்து அடிக்கடி வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை எடுத்து விஜே விஷால் வெளியிட்டு வருவார். சில மாதங்களுக்கு முன்பு கூட கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ் தான் சீரியலில் இருந்து விலகப் போவதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தபோது நாங்க எங்க அப்பாவை அப்படி எல்லாம் சீரியலில் இருந்து வெளியே போக விடமாட்டோம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இவர் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் வெளியேறி விட்டாரே என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக விஜே விஷாலுக்கு இளம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல அம்மா ரசிகர்களும் உருவாகி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் இவருக்கு இதைவிட பெரிய வாய்ப்பு கிடைத்து அதற்காக போயிருக்கிறாரா? அல்லது சீரியல் தரப்போடு ஏதேனும் பிரச்சனையா? அதனால் எதுவும் சொல்லாமல் சீரியலில் இருந்து விலகி விட்டாரா என்றெல்லாம் கேள்விகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் எழில் கேரக்டரில் அறிமுகமாகி இருக்கும் நடிகர் நவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரொபைல் போட்டோ மாறி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதோடு தன்னை வாழ்த்தி வரும் கமெண்ட்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
புதிய எழிலாக இணைந்திருக்கும் நடிகர் நவீன் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்த நடிகர் தான் இந்த நிலையில் பழைய எழில் திடீரென்று வெளியேறியது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications