கோபி வீட்டுக்கு அமிர்தாவின் குழந்தையை தூக்கி வந்த இனியா.. ராதிகாவின் ரியாக்ஷன்.. திணறும் கோபி
நிலா பாப்பாவுக்கு நீங்க தாத்தா ஆகிட்டீங்க என இனியா சொல்ல, கோபி என்னது நான் தாத்தாவா என அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் குழந்தையான நிலாவை இனியா கோபியின் வீட்டிற்கு தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார்.
நிலா பாப்பாவை பார்த்த ராதிகா அதிர்ச்சியாகி முறைக்கிறார்.
தாத்தாவுக்கு ஹாய் சொல்லு என்று இனியா நிலாவிடம் சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து என்னது நான் தாத்தாவா என கேட்கிறார்.

வீட்டு பிரச்சனை
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பெரும் பரபரப்புக்கு இடையில் நடைபெற்றது. தனக்கு பிடிக்காத அமிர்தாவை எழிலுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் என்று ஈஸ்வரி கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் கோபி தான் கொடுத்திருந்த கெடு முடிந்து விட்டது இனி வீட்டை விட்டு கிளம்புங்க என்று கூற, அதற்கு ஈஸ்வரி ஏற்கனவே கோபி இடம் வீட்டை இனி நீ கேட்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ராம மூர்த்தியும் தன்னுடைய கிராமத்தில் இருக்கும் சொத்து எல்லாம் கோபியின் பெயரில் எழுதி தருகிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில் தன்னுடைய வீட்டு மதிப்பிற்கு கிராமத்தில் இருக்கும் சொத்து முழுக்க கொடுத்தாலும் ஈடாகாது. இன்னும் 20 லட்சம் வேண்டும் என்று கோபி கூற அந்த 20 லட்சத்தையும் ஆறு மாசத்திற்குள் நானே தந்து விடுகிறேன் என்று பாக்கியா சவால் விட்டு இருக்கிறார். எப்போதும் போல பாக்யா தான் மொத்த தப்பும் செய்தார் என்று கோபி ஒருபுறம் குறை கூறிக் கொண்டிருக்க, ஈஸ்வரியும் எல்லா தப்புக்கும் நீ தான் காரணம் பாக்கியா என்கிற அதே பாட்டை தான் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்.

நிலாவை கொஞ்சும் இனியா
இந்த நிலையில் அமிர்தா ஈஸ்வரி இருக்கும் இடத்தில் வருவதற்கே பயந்து கொண்டு இருக்கிறார். வீட்டில் அனைவரும் அமிர்தவோடு பழகிவிட்ட நிலையில், ஈஸ்வரியை மட்டும் பார்த்தாலே பயந்து கண்கலங்கும் அமிர்தாவுக்கு ஜெனிதான் தைரியம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் எழில் நிலா பாப்பாவோடு ரோட்டில் நின்றபடி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, அப்போது அங்கே டியூஷன் போயிட்டு வரும் இனியா எழிலை பார்த்ததும் பேச போக கையில் இருக்கும் நிலா பாப்பாவிடமும் கொஞ்சி விளையாடுகிறார்.

தாத்தா ஆகிட்டீங்க கோபி
பிறகு நிலா பாப்பா என்னை எப்படி கூப்பிட வேண்டும் என்று கேட்க நீ நிலா பாப்பாவுக்கு அத்தை என்று தாத்தா சொல்கிறார். பிறகு நிலாவை வாங்கிக்கொண்டு கோபியின் வீட்டிற்கு இனியா செல்கிறார். அங்கே கோபியும் ராதிகாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வந்த இனியா நிலாவை தூக்கிக் கொண்டு வந்ததை பார்த்ததும், ராதிகா அதிர்ச்சியாகிறார். இனியா நிலாவிடம் ஹாய் சொல்லு என்று கூறி, பிறகு எழில் அண்ணா அப்பா என்றால் நான் அத்தை இல்ல? என்று கூறிக்கொண்டு அப்ப நீங்க இவளுக்கு தாத்தா என்று கூற, நான் தாத்தா இல்லை என்று கூறுகிறார். பிறகு ராமமூர்த்தி உன் பையனுக்கு அவ குழந்தைன்னா நீ அந்த குழந்தைக்கு தாத்தா தானே? என்று சொல்ல, கோபியின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பிரமோ முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications