எழில் எடுத்த எதிர்பாராத முடிவு.. நிச்சயதார்த்த மேடையில் அசிங்கப்பட்ட கோபி.. அமிர்தாவின் முடிவு?
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நிச்சயதார்த்த மேடையில் வர்ஷினியோடு போட்டோ எடுப்பதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா எழில் வீட்டிற்கு வந்து அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதை கேட்டு மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.
பாக்கியா கடைசி நேரத்திலும் எழிலிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா என்று கேட்க அதற்கு எழில் நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என்று கூறுகிறார்.
எழில் நிச்சயதார்த்த மேடையில் அப்பா அம்மாவை வர சொல்லுங்க என்று சொன்னதற்கு கோபி தன்னருகில் ராதிகாவே வந்து நிற்க சொல்கிறார்.
கடைசி நேரத்தில் என்னுடைய அம்மா பாக்கியா தான் அவர்தான் வரவேண்டும் என்று எழில் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

எழிலிடம் கேள்வி கேட்கும் பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி, ராதிகாவுடன் மண்டபத்துக்கு வர செழியன் அவர்களை வரவேற்று வர்ஷினியின் அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். கோபி மண்டபத்திற்கு வந்ததை பார்த்து ராமமூர்த்தி அதிர்ச்சியாகி நிற்க, கோபி அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடியே மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். பிறகு பாக்கியா எழிலின் ரூமுக்கு சென்று அவரிடம் பேச முயற்சி செய்ய அப்போது அங்கு செழியன் உட்கார்ந்து இருப்பதால் செழியினை பாட்டி உன்னை கூப்பிட்டாங்க என சொல்லி அனுப்பிவிட்டு எழிலிடம் இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பமா? என்று கேட்கிறார். அதற்கு எழில் நான் நல்லாத்தான் இருக்கேன் என்னை யார் கட்டாயப்படுத்தி இப்படி பண்ண முடியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா உன் முகமே சரியில்லை உண்மையை சொல்லு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி
பாக்கியா எழிலிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே ஈஸ்வரி வந்து இவர்கள் பேசுவதை கேட்டு உள்ளே வந்ததும், நெனச்சேன் நீ இப்படித்தான் அவன் கிட்ட ஏதாவது பேசி குழப்பவா என்று நினைத்தேன் என்று பாக்யாவை திட்டி வெளியே கூட்டி செல்கிறார். பிறகு ஈஸ்வரியிடம் பாக்யா அவனுக்கு எதுக்கு இவ்வளவு அவசரம் அவசரமாக கல்யாணம் என கேட்க அதற்கு ஈஸ்வரி இல்லனா அவன் அந்த அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்பான் உனக்கு பரவாயில்லையா? என கேட்கிறார். அதற்கு பாக்கியா பதில் எதுவும் சொல்லாமல் இருக்க, நீ எதுவும் பேசக்கூடாது அவனுக்கு அம்மாவா மேடையில் நின்னா மட்டும் போதும் என்று பாக்யாவை மிரட்டுகிறார்.

அமிர்தாவுக்கு தெரியவரும் உண்மை
அதே நேரத்தில் எழில் வீட்டிற்கு வந்த அமிர்தா கதவைத் தட்டி பெல் அடித்து பார்த்தும் யாரும் இல்லாததால் வெளியே வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரிக்கிறார். அப்போது நிச்சயதார்த்தத்திற்கு எல்லோரும் போயிருக்காங்க என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது எழிலுக்கு நிச்சயதார்த்தம் என அமிர்தாவுக்கு தெரியாமல் இருக்கிறது. பிறகு எல்லோரும் எந்த இடத்திற்கு போயிருக்காங்க என விசாரித்து வடபழனி முருகன் கோவிலில் பக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கிளம்பி செல்கிறார்.

கோபிக்கு கிடைக்கும் அவமானம்
இந்த பக்கம் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்து இருக்கிறது. மேடையில் எழில், வர்ஷினி அமர்ந்திருக்கின்றனர். அப்போது பிள்ளையோட அப்பா அம்மா வாங்க என ஐயர் குறிப்பிட எல்லோரும் பாக்கியாவை மேல வர சொல்லுகின்றனர். கோபி ,ராதிகாவை மேலே வருமாறு கூப்பிடுகிறார். ராதிகா நான் வரவில்லை என்று மறுத்தாலும் கோபி வா பார்த்துக்கலாம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது வர்ஷினியின் அப்பாவும் அவங்க ரெண்டு பேரும் வந்தா ஜோடியா நிப்பாங்க என கோபிக்கு ஆதரவாக பேசுகிறார். அதற்கு எழில் பாக்கியா தான் எங்க அம்மா அவங்க தான் வந்து நிற்கணும். ஏன் நீங்க தனியா நிக்கலையா? என சொல்கிறார். இதைக் கேட்ட வர்ஷினி நீங்க எதுவும் பேசாதீங்க அப்பா என கூறுகிறார். பிறகு பாக்யா வந்து நிச்சயதார்த்த மேடையில் நிற்க கோபியும், ராதிகாவும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications