பாக்கியா கொடுத்து அவமானத்தால் ராதிகா எடுத்த எதிர்பாராத முடிவு.. தவிக்கும் கோபி.. மாறிப்போன கதை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ராதிகாவை தேர்தலில் தோற்கடித்து விட்டார்.
அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த பாக்கியா ராதிகா மற்றும் கோபியின் திமிர் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாக்யா கொடுத்த பதில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா தன்னை தேர்தலில் ஜெயிக்க வைத்த அனைவருக்கும் நன்றி கூறுகிறார். ஏற்கனவே கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிய பேச்சுக்கு அப்போது அமைதியாக இருந்த பாக்கியா இப்போது பதிலடி கொடுத்து இருக்கிறார். பாக்யா மேடையில் பேச ஆரம்பித்ததும் கோபி ராதிகாவை கூப்பிட்டுக் கிளம்ப கோபியின் அப்பா மற்றும் செல்வி அவர்களை தடுத்து நிறுத்தி பாக்கியா பேச்சை கேட்க வைக்கின்றனர். ஆரம்பத்தில் கோபியோடு கிளம்பிய ராதிகாவும் பின்பு என்னதான் பேசுகிறார்கள் என பார்ப்போம் என இருக்க பாக்கியா படித்தவர்களால் மட்டும் எங்கேயும் ஜெயித்து விட முடியாது. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அனுபவமும் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமையும் இருந்தால் ஜெயித்து விடலாம் மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை பார்ப்பதால் மட்டும்தான் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்று இல்லை என கோபி மற்றும் பாக்யாவை பங்கமாக மேடையிலே பதில் கொடுத்து வெறுப்பேத்துகிறார். கடைசியில் ராதிகா அந்த இடத்தை விட்டு கிளம்ப மேடையில் இருக்கும் பாக்யாவை ஒரு நிமிடம் முறைத்து விட்டு பின்பு அங்கிருந்து செல்கிறார்.

குழந்தையாக மாறிய பாக்யா
வீட்டிற்கு வந்த பாக்யாவுக்கு ஈஸ்வரி ஆரத்தி எடுத்து அமர்க்களம் படுத்த, கோபியின் அப்பா மாலை வாங்கி வந்து பாக்யாவின் கழுத்தில் போட்டு பாராட்டு தெரிவிக்கின்றனர். பாக்கியா ராஜசேகரை சந்திக்க செல்கிறார் அங்கே ராஜசேகர் இடம் பேங்கில் இன்னும் லோன் கிடைக்கவில்லை என சொல்ல, அவர் தன்னுடைய பைனான்சியிலிருந்து பணத்தை கொடுக்க பணத்தை பெற்று பாக்கியா சந்தோஷப்படுகிறார். வீட்டில் வந்து சந்தோஷத்தில் அனைவரையும் கட்டிப்பிடித்து குழந்தை போல துள்ளிக் குதிக்கிறார் அனைவரும் என்ன விஷயம் என கேட்க, அனைவரிடமும் விஷயத்தில் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அழுது புலம்பும் ராதிகா
மறுபக்கம் ராதிகாவும் கோபியும் வீட்டிற்கு வருகின்றனர். அம்மா நீங்க ஜெயிச்சுட்டீங்களா என மயூ கேட்க, நீ உள்ளே போ மயூ என ராதிகா அனுப்பி வைத்துவிட்டு சோபாவில் கோபமாக உட்காருகிறார். கோபி சமாதானம் செய்ய முயற்சி செய்ய நான் உங்ககிட்ட தேர்தலில் நிற்கிறேன் என்று கேட்டனா. இது எனக்கு இதெல்லாம் தேவையா? ஏற்கனவே காய்கறி வாங்க போகும்போது இந்த ஏரியால இருக்கிறவங்க எல்லோரும் ஒரு மாதிரி பேசுறாங்க, இப்போ இன்னும் அசிங்கமா போயிடுச்சு, வெளியில் தலை காட்ட முடியாது என அழுது கொண்டு புலம்புகிறார்.

வில்லியாக மாறும் ராதிகா
அதற்குப் பிறகு நான் பாக்கியாவை இதுவரைக்கும் ரொம்ப இன்னசென்ட் நினைச்சேன். ஆனா ,அவங்க அப்படி இல்லவே இல்லை. இனிமே இந்த ராதிகா யாருன்னு நான் காட்டுறேன் என சொல்லி உள்ளே எழுந்து செல்கிறார். கோபி என்னடா பண்ணி வச்சிருக்க இப்படியே போய்கிட்டு இருந்தா சரியில்லை, நாமலே ராதிகாவை மேலும் கோபப்படுத்திட்டோம். இவ்வளவு கேவலமாக தோற்பாள் என்று கனவுலயும் நினைச்சு பாக்கலையே என்று புலம்பிக் கொண்டு, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications