பாபா பாஸ்கரின் மனைவி இந்த பிரபலம் தானா? குழந்தைகளோடு முதல் முறை வெளியிட்ட புகைப்படம்
சென்னை; டான்ஸ் மாஸ்டராக பலருக்கும் தெரிந்த பாபா மாஸ்டர் சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராகவும் அசத்தியிருந்தார்.
நடுவராக இருக்கும்போது கூட தன்னுடைய காமெடி திறமையினால் பலரையும் கவர்ந்த பாபா மாஸ்டர் முதல் முறையாக தன்னுடைய குடும்ப புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்ததும் ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்று ஆசையோடு பிரபல நடன இயக்குனர்களான சிவசங்கர் மாஸ்டர், மற்றும் ராஜசுந்தரம் மாஸ்டரிடம் ஆரம்பத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபா பாஸ்கர் பிறகு சில திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
அதுவும் தமிழில் நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சித்தார்த், கார்த்தி, விஜய் சேதுபதி, பிரபுதேவா, விஷால் என பல நடிகர்களோடும் பணியாற்றியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாகர்ஜுனா, மகேஷ்பாபு, ராம்சரண் என பிறமொழி நடிகர்களோடும் இவர் பணியாற்றி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு சோதனைகளை கடந்து வந்தாலும் இவருடைய விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாகத்தான் இன்று தன்னுடைய திறமையை பலருக்கு நிரூபித்து இருக்கிறார்.
ஒரு சிலரிடம் பேசும்போதும், ஒரு சிலருடைய பேச்சை கேட்கும் போதும் தான் தன்னம்பிக்கை துளிர்விடும். அந்த மாதிரி தன்னம்பிக்கையான பேச்சுக்கு சொந்தக்காரரான பாபா மாஸ்டர் டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தான் நடன இயக்குனராக இருக்கும் திரைப்படங்களில் சில பாடல்களுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய காமெடி மற்றும் சமையல் திறமை பலருடைய மனதையும் கவர்ந்து விட்டது. அதோடு இவர் தமிழ் ரியாலிட்டி ஷோவில் மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்று இருக்கிறார்.
அந்த வரிசையில் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஜட்ஜ் ஆக இருந்து பல நடன கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் தன்னுடைய கருத்தை சொல்லும்போதும் எதிரில் இருப்பவர்களை மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்கள் தவறை திருத்திக் கொள்ளும் வகையில் நுணுக்கமாக தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார்.
அதோடு சிங்கம் திரைப்படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான 58வது ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.குக் வித் கோமாளி சீசன் இரண்டில் இவர் செய்த அட்ரா சிட்டி இந்த நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வந்தனர்.
அதுபோல என்னதான் இவர் நடிப்பு, நடனம், ரியாலிட்டி ஷோ என பல துறைகளில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பமும் தனக்கு அதிக அளவில் முக்கியம் தான் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்படும்போது தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்று பல மேடைகளில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் பாபா மாஸ்டர் தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகனுடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான லைக்களை குவித்து வருகிறது. அதேபோல இன்னொரு பதிவில் பாபா மாஸ்டர் தான் சிறுவயதில் பெண் வேடமிட்டு டான்ஸ் ஆடிய புகைப்படத்தையும் அதுபோல தன்னுடைய மகள் டான்ஸ் ஆடிய புகைப்படத்தையும் சேர்த்து நானும் என்னுடைய மகளும் சிறு வயது புகைப்படங்கள் என்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications