Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bad Girl Review: அந்த இருட்டுல பேசுறது.. பேட் கேர்ள் படத்தை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்! இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'பேட் கேர்ள்'. அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். படம் கடந்த வாரம் வெளியானது. இந்த ஆர்ட் ஹவுஸ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தை பார்த்து ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.

Bad Girl Blue Sattai Maaran Vetrimaaran

பெண்களின் உலகம்

'பேட் கேர்ள்' படத்தின் கதை என்னவென்றால், ஒரு பெண், தனது பதின்ம வயதில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறாள். வயதுக்கோளாறு காரணமாக ஒரு பையனைக் காதலிக்கிறாள். இது வீட்டில் தெரிந்து, அவளை வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். இதனால் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதி, குடும்பத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கோபம் கொள்கிறாள். பிறகு கல்லூரி சென்று, அங்கும் ஒரு காதல் வந்து பிரேக்அப் ஆகிறது. அதன் பின்னர் அவளுக்குப் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இந்தப் படம், ஒரு பெண் 15 வயது முதல் 30 வயது வரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ நினைத்தால், அவள் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதைப் பேசுகிறது.

பேட் கேர்ள் வசூல்

'பேட் கேர்ள்' திரைப்படம் ஒரு வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை. இது ஒரு குறிப்பிட்ட வகை ரசிகர்களுக்கான கதை. அதனால், படம் பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருந்தாலும், அதன் கதைக்காக ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகிறது.

இயக்குநர் வர்ஷா பரத் ஒரு பேட்டியில், "நான் ஒரு கமர்ஷியல் படம் எடுக்க வரவில்லை. ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து, அவளது உலகத்தை, அவள் சந்தித்த வலிகளை, அவள் சுதந்திரத்திற்காகப் போராடுவதை நேர்மையாகப் படமாக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்" என்று கூறியிருந்தார்.

புளூ சட்டை மாறன் விமர்சனம்

வழக்கம்போல, இந்தப் படத்தையும் புளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியில் விமர்சித்துள்ளார். அவர் சொன்ன சில விஷயங்கள் இதோ: புதிய முயற்சிதான், ஆனா போர்: "இந்தப் படம் பார்த்தா புதுமையான கதையாதான் தெரியுது. ஆனா அதை ரொம்ப சீரியஸா எடுத்துருக்காங்க. அதனால படம் சுவாரசியம் இல்லாமப் போச்சு." "படத்துல வசனம் கேட்கவிடாம இசையை வச்சிருக்காங்க. அப்புறம் என்னன்னு பார்த்தா பாகவதர் காலத்து சினிமா மாதிரி படம் முழுக்கப் பாட்டு வந்துகிட்டே இருக்கு."

இருட்டாவே இருக்கு:

"படத்தோட ஒளிப்பதிவு ஒரே இருட்டா இருக்கு. ஒரு காட்சில என்ன பேசுறாங்கன்னே புரியல. அப்படியே மணி சார் (மணிரத்னம்) படம் மாதிரி வசனம் பேசி இருக்காங்க. அதுவும் கேட்கல." "படம் ஒரு மணிநேரம், 52 நிமிடம்தான் ஓடுது. ஆனா ரெண்டு, மூணு நாள் ஓடுன மாதிரி இருக்குது. அவ்வளவு ஒரு அயர்ச்சியைக் கொடுக்குது."

இப்படி, புளூ சட்டை மாறன் இந்தப் படத்தை ஓட்டித் தள்ளியுள்ளார். மொத்தத்தில், 'பேட் கேர்ள்' திரைப்படம் ஒரு புதுமையான முயற்சிதான். ஆனால், அந்த முயற்சி ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்குப் பிடித்திருந்தாலும், பலருக்கு அது சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+