மோசமான படம் "பேட் கேர்ள்".. பட்டியலினம் என்றால் பா. ரஞ்சித் பொங்கறாரு? அப்ப பிராமணர்கள்? பிரபலம் நச்
சென்னை: "பேட் கேர்ள் படம் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய படம்.. போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்வார்கள்.. இப்படிப்பட்ட படம் இப்போது தேவையா?" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
AG Modern Media யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "பேட் கேர்ள் என்ற படம் வெளிவருகிறது.. இந்த படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பா.ரஞ்சித், பாராட்டி ட்விட்டரில் எழுதியிருக்கிறார் . வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் உண்டு. அசுரன், விடுதலை, என தரமான படங்களை இயக்கியவர்.. ஆனால், துள்ளுவதோ இளமை என்ற படரேஞ்சுக்கு இறங்கி, பேட் கேர்ள் படத்தை தயாரித்திருக்கிறார்.. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் சினிமாவில் கொடிகட்டி பறந்த சமயத்தில், ஒரு படம் வசூலில் இமாலய சாதனை புரிந்தது. அந்த படம்தான், ஐவி சசி எழுதி இயக்கிய, "அவளோட ராவுகள்" என்பதாகும். இந்த படத்தில் விபச்சாரியாக நடித்தவர் சீமா.
துள்ளுவதோ இளமை: இதற்கு பிறகு செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடித்த படம் துள்ளுவதோ இளமை படமும் கவர்ச்சி விருந்தை தந்திருந்தது.. இதையெல்லாம் மீறும் வகையில், இந்த பேட்கேர்ள் படம் வரப்போகிறது.. எழுதி வைத்து கொள்ளுங்கள், பேட்கேர்ள் படம் வசூலில் சாதனை புரிய போகிறது. காரணம், இதுக்கு ஏகப்பட்ட புரமோஷன்கள்.. நான் இப்போது பேசும் பேச்சுக்கூட, புரமோஷனாகத்தான் அமையும்.
அதன் டிரெயிலரிலேயே முழு கதையும் சொல்லிட்டாங்க. ஒரு பிராமண பெண் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்.. முற்போக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.. ஆனால், அவரது பிராமண பெற்றோரும், உறவுனர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனினும், அந்த பிராமண பெண், தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், தன்னுடைய சுதந்திரத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று சொல்லி வீட்டை விட்டே வெளியேறிவிடுகிறாள்.
டிரெயிலர்: பிறகு பாய்பிரண்ட் வைத்து கொள்வது கவுரவம் என்று நினைக்கிறாள்.. முத்தமிடுவது, உடலுறவு காட்சியும் டிரெயிலரில் காட்டப்படுகிறது.. இந்த பெண்ணின் நடவடிக்கைகளை, அவரது தோழிகள் எதிர்க்கிறார்கள். அதற்கு பிறகு அப்பெண்ணின் நிலைமை என்ன?
இது எவ்வளவு மோசமான படம்? இந்த சாதி என்று சொல்லாமல் அந்த ஹீரோயினை காட்டியிருக்கலாமே? ஏன் இழிவுப்படுத்த வேண்டும்? பட்டியலினத்தை தவறாக சித்தரித்துவிட்டால் மட்டும், பா.ரஞ்சித், வெற்றிமாறன் கூக்குரல் எழுப்புகிறார்கள். இப்போது இந்த படத்தில் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மோசமான காட்டியிருப்பது தவறில்லையா? உங்களுக்கொரு நியாயம், பிராமண பெண்ணுக்கு ஒரு நியாயமா? இதைக் கேட்டால் வம்பு செய்வதாக என்னை சொல்வாங்க.. சினிமாவில் இது தேவையா?
சென்சார் போர்டு: ஆனால், பள்ளி சிறார்களை தவறாக சித்தரித்தால், அவர்களை தண்டிக்க போக்சா சட்டத்தில் இடமுண்டு.. அந்தவகையில், இந்த படம் குறித்து போக்சாவில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.. அதனால் இந்த படத்துக்கு நிச்சயம் சிக்கல்கள் வரும்.. இந்த படத்தின் டிரெயிலரை எப்படி அனுமதித்தார்கள்? என்று தெரியவில்லை.. சென்சார்களும் இதை விரும்புகிறதா தெரியவில்லை.. ஆனால், பேட்கேர்ள் தடை செய்யப்பட வேண்டியபடம்.. நாம சொன்னால் யாரு கேட்க போறாங்க" என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications