chithi 2 serial: இன்று போய் நாளை வா...நமக்கும் சேர்த்து சொல்லிட்டாங்க!
Recommended Video
சென்னை: சித்தி 2 சீரியலில் ராதிகா சரத்குமார் காமெடியும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு. இன்று இயக்குநர் கே.பாக்கியராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் காமெடி காட்சி போல சித்தி 2 சீரியலிலும் காட்சி வைத்துள்ளார்கள்.
குடுகுடுப்பைகாரன் நடு சாமத்தில் வந்து, கருப்பு பேண்ட் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு ஒருத்தர் வந்து கதை கேட்பார். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையே மாறப் போகுதுன்னு சொல்றான்.
சித்தி 2 சீரியலில் சண்முகமாக நடிக்கும் பொன்வண்ணன் கதை எழுதுபவராக நடிக்கிறார். அதன் படி இந்த குடுகுடுப்பைக்காரன் சொல்வது போல கதை அமைத்து இருக்கிறார்கள்.

அப்படி இல்லை நான்
சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு வரும் ராதிகாவின் ராடான் தயாரிப்பு சீரியலில் நடிப்பவர்கள், மேடம் பத்தி சொல்லுங்க என்று கேட்டால், மேடம் பார்த்து நாங்க பயந்துருவோம்.. ரொம்ப ஸ்டிரிக்ட் அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லுவார்கள். அதை பற்றி ராதிகா மற்றும் சரத் குமார் கலந்துகொண்ட வணக்கம் தமிழாவில் கேட்டபோது, நான் அப்படி இல்லை என்று சொன்னார் ராதிகா. ரொம்ப ஜாலியான டைப்.. ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை என்று சொன்னார்.

ஸ்டேண்டப் காமெடி
எனக்கும் தெரியலை... 4 மணி நேரம் ஸ்டேண்டப் காமெடி செய்து, எல்லாரையும் விடாமல் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவர்... அவ்வளவு காமெடி செய்வார்கள். வீட்டிலும் அப்படித்தான் நிறைய காமெடி இருக்கும். செட்டில் கூட நான் அமைதியா உட்கார்ந்து விடுவேன்.. இவங்கதான் எல்லார் கூடயும் அரட்டை அடிச்சுகிட்டு சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க என்று சரத்குமார் சொன்னார். அதற்கு ராதிகா, இவர் கூட வீட்டில் பேசிக்கலாம்.. அதனால் நான் செட்டில் நல்ல அரட்டை அடிப்பேன்.. என்னை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னார்.

டெக்னீஷியன் காத்திருந்தால்
எல்லாம் தயாராகி டெக்னீஷியன்ஸ் ஷூட்டிங்கில் ஆர்டிஸ்டுக்காக காத்திருந்தால் எனக்கு பிடிக்காது. அதுல மட்டும் நான் ஸ்டிரிக்ட்டா இருப்பேன். அதுக்கு சொல்றங்களோ என்னவோ என்று கூறினார் ராதிகா. சரி விஷயத்துக்கு வருவோம்... சித்தி 2 சீரியலில் இன்று போய் நாளை வா படத்தில் வரும் ஒரு காட்சியை உல்டா செய்து எடுத்து இருக்கிறார்கள். அதே பாக்கியராஜ், அதே ராதிகா காம்பினேஷன்.

இன்று போய் நாளை
ராதிகா இயல்பிலேயே நகைச்சுவை நிறைந்தவர் என்பதால், சித்தி 2 விலும் நகைச்சுவை செய்யும் கதாபாத்திரமாக அமைந்து இருக்கலாம் என்று நினைப்பது போல இன்று போய் நாளை வா திடரைப்படத்தின் காட்சி போல ஒரு காட்சியை அமைத்து இருக்கிறார்கள். குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல பாக்கியராஜ் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டு வந்து நிற்க, ராதிகா அவரை அலட்சியம் செய்து, சார் ஒரு ஓரமா நில்லுங்க... நான் எதிர்பார்த்துக்கிட்டு இருப்பது வேற ஒருத்தர் என்று சொல்லி ஆவலுடன் வாசலைப் பார்த்து ஐயோ ஐயோ என்று எக்ஸைட்டாகி நிற்கிறார். அதற்குள் தொடரும் போட்டு நமக்கும் இன்று போய் நாளை என்று சொல்லி விட்டார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications