பாக்கியலட்சுமி அண்ணியா... என்ன புரோ சொல்ற... கலகல சமையல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பம், கூட்டம்னு சுந்தர்.சி படம் மாதிரியே களைக்கட்டுது. ஆனாலும் எல்லாமே யதார்த்தமான காட்சிகளா மனசை அள்ளுது.

குஷ்பூ குடும்பத் தலைவியா பொறுப்பான வேஷத்துல நடிச்சிருக்காங்க. நடிப்பும் யதார்த்தமா, கணவன் மனைவி அந்நியோன்யம், குழந்தைகளின் மீதான பாசம், குடும்ப பாசம்னு குஷ்பூ கேரக்டர் வலு சேர்க்குத்து.

குஷ்பூவின் ஓரகத்தியின் பழிவாங்கற நடிப்பும் நல்லாவே இருக்கு. இவங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வேலைக்காரி பொன்னம்மா கலாய்க்கறது நல்ல நகைச்சுவை. பொன்னம்மா ஒரு நல்ல நடிகைன்னு நிரூபிக்க இந்த சீரியல் அவருக்கு கிடைச்ச இன்னொரு வாய்ப்பு.

Baghyalakshmi cooks for all

திடீர்னு குஷ்பூவின் ஓரகத்தி டாக்டரம்மாவுக்கு பிரியாணி சாப்பிடணும்னு ஆசை வருது. புருஷனை ஹோட்டலுக்கு கூப்பிடறாள். பிரியாணி சாப்பிடணும்னா நாம மட்டும் தனியா ஏன் போகணும்.. எல்லாரும் போலாமேன்னு சொல்றார் அவர்.

அண்ணே என்ன சொல்றீங்கன்னு மகாவின் புருஷனைப் பார்த்து கேட்க, உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா எங்களுக்கு ஒண்ணும் இல்லைன்னு அவர் சொல்றார். அதுக்குள்ளே, பாக்கியலட்சுமி பிரியாணி நான் நல்ல செய்வேன்க்கா.. இதுக்கு எதுக்கு கடைக்கு போயிகிட்டுன்னு சொல்றா.

Baghyalakshmi cooks for all

ஐயே...இவ சமைச்சதை யார் சாப்பிடுவான்னு சொல்றா. சரி கடைக்கு போலாம்னு சொல்றவங்க கை தூக்குங்கன்னு சொல்ல, தான் மட்டும்தான் கை தூக்கறா. பாக்கியலட்சுமி பிரியாணி வேணும்னு சொல்றவங்க கை தூக்குங்கன்னு சொல்ல எல்லாரும் தூக்கறாங்க.

சரின்னு குதூகலமா பொன்னம்மா, பாக்கியலட்சுமி ரெண்டு பேரும் கிச்சனுக்கு போய் வேலையை ஆரம்பிக்கறாங்க. அங்க ரவியின் தங்கையும் உதவி செய்துகிட்டு இருக்கா. வாலு.. ஒரு நாளாவது சமைச்சு இருப்பியா.. முதல்ல சுட தண்ணி வச்சிருப்பியான்னு கேட்கறான்.அவ சும்மா இருக்க, எப்படி சமைக்கறதுன்னு பாக்கியலட்சுமி அண்ணிக்கிட்ட கத்துக்கன்னு சொல்ல,

பொன்னம்மா கையில வச்சிருந்த தட்டை அதிர்ச்சியில் கீழ போட்டுடறா. பாக்கியலட்சுமி விக்கித்து ரவியை பார்க்கறா.. என்ன புரோ சொன்னீங்க.. பாக்கியலட்சுமி அண்ணியான்னு கேட்கறா.. அப்படியா சொன்னேன்.. ஒரு ஃபுலோல வந்திருக்கும்னு சொல்றான்.

Baghyalakshmi cooks for all

தம்பிதான் சொல்லுதுல்ல.. ஃபுலோவாமான்னு பொன்னம்மா கலாய்க்கறாங்க. சரிண்ணா நீ சொல்ற மாதிரி பாக்கியலட்சுமி அண்ணிகிட்ட சமையல் கத்துக்கறேன்னு சொல்றா தங்கச்சி. என்னம்மா நீயுமான்னு பாக்கியலட்சுமி கேட்க.. சாரி அண்ணி.. ஒரு ஃபுலோல வந்துருச்சுன்னு சொல்றா.

பொன்னமாமா உனக்கு ஏன் கண்ணுல தண்ணி கொட்டுதுன்னு ரவி கேட்க அது ஒரு ஃபுலோல வருது தம்பி.. வெங்காயம் வெட்டுனா கண்ணுல தண்ணி வராதான்னு கேட்கறாங்க. வெங்காயம் வெட்டும்போது கண்ணுல தண்ணி வராம இருக்க இந்த கூலிங் கிளாஸை போட்டுக்கோன்னு சொல்லி தன் கண்ணாடியைத் தர்றான் ரவி.

இப்படி சமையலறையில் கலகலன்னு இருந்த இவங்களை தனித்தனியா வேலை கொடுத்து அனுப்பிட்டு, பாக்கியலட்சுமி பிரியாணியை கெடுக்க பாக்யலட்சுமிக்கும் ஒரு வேலை கொடுக்கறாங்க டாக்டரம்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+