பிரசன்னாவுக்கு முன்பே.. தயாரிப்பாளரோடு நிச்சயதார்த்தம்.. சினேகா மீது வன்மத்தை இறக்கிய பயில்வான்
சென்னை: நடிகை சினேகா பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல தயாரிப்பாளரோடு ஏற்கனவே எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டது என்று பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் நடிகை சினேகா அந்த தயாரிப்பாளரை பிரிவதற்கான காரணமும் இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் நிலையில் இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீப காலமாகவே நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பற்றியும் பிரபலங்கள் பற்றியும் பரபரப்பான தகவல்களை பேசி வருகிறார். அது குறித்து அதிகமானோர் அவரை சமூக வலைத்தளத்தில் திட்டியும் வருகின்றனர் சிலர் அவரை உயிரோடு எரிக்க வேண்டும் என்றெல்லாம் கூட திட்டி இருக்கிறார்கள்.
அதுபோல அவருடைய வீடியோவிற்கு வியூஸ் வரவேண்டும் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசுவதாகவும் பயில்வான் ரங்கநாதன் பற்றி பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிப்பை ரேகா நாயர் பொதுவெளியில் வைத்து பயில்வான் ரங்கநாதனை அடிக்கப் பாய்ந்து இருந்தார். ஆனாலும் அதைத் தொடர்ந்தும் தொடர்ச்சியாக பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நடிகை சினேகாவை பற்றியும் பரபரப்பான தகவல்களை பேசி இருக்கிறார். அதாவது நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு நாக் ரவி என்கிற தயாரிப்பாளரை காதலித்து இருந்தார். இவர்கள் இருவரும் வைர மோதிரம் மாற்றி நிச்சயம் கூட செய்து கொண்டார்கள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தன்னுடைய காதலர் தனக்கு உண்மையாக இல்லை என்பதை புரிந்து கொண்ட சினேகா அந்த தயாரிப்பாளர் காதலை முறித்துக் கொண்டார்.
இதற்குப் பிறகு சினேகா திருமணத்தின் மீது வெறுப்பில் இருந்தார். அதனால் தனக்கு திருமணமே வேண்டாம் என்றெல்லாம் அவர் முடிவு எடுத்திருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் பிரசன்னாவின் மீது காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நடிகை சினேகா 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகி. அப்போ மட்டுமல்லாமல் இப்போ வரைக்கும் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முன்னணி கேரக்டரிலும் நடித்து வருகிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கலக்கி வருகிறார். அத்தோடு நடிகர் பிரசன்னாவோடு 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிகை சினேகா ஜோடியாக நடித்திருந்தார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறி 2011 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். அடிக்கடி இவர்கள் தங்களுடைய குழந்தைகளோடு புகைப்படங்களும் வீடியோக்களையும் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை சினேகா தன்னுடைய காதல் கணவர் பிரசன்னாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட சினேகாவும் பிரசன்னாவும் சேர்ந்து சில நாட்களிலே ஜோடியாக புகைபடங்களை எடுத்து வெளியிட்டிருந்தனர். அதுபோல தற்போது பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் சினேகா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications