பயில்வான் ரங்கநாதனை நேரடியாக கேள்வி கேட்டு கிழித்த பெண்கள்.. வார்த்தையை விட்டு மாட்டிக்கிட்டாரே!
சென்னை: பயில்வான் ரங்கநாதன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியில கலந்து கொண்ட போது youtube சேனலில் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி வருவது குறித்து பொதுமக்கள் சார்பாக இரண்டு பெண்கள் கேள்வி கேட்டிருக்கின்றனர்.
அந்த வகையில் கலைஞர் டிவியில் வாழ்த்து காட்டுவோம் என்று நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை என்று நிகழ்ச்சியை தழுவி வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. இதில் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் டிஆர்பி அதிகரிப்பதற்காக பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்திருக்கின்றனர். அப்போது பயில்வானிடம் நேரடியாக நடிகை ஷகிலாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அது போல பயில்வான் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்ற போது பயில்வான் இடம் பொதுமக்கள் சார்பாக இரண்டு பெண்கள் பல கேள்விகளை கேட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் வாழ்ந்து பயில்வான் நான் எந்த நடிகைகளை பற்றியும் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. நடிகைகள் சில பேட்டிகளில் பேசியதை தான் நான் என்னுடைய வீடியோக்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதுபோல எனக்குன்னு எந்த youtube சேனலும் கிடையாது. என்னிடம் சில youtube சேனல் காரங்க பேச சொல்லுறாங்க நான் அவர்களுடைய சேனலுக்கு பேசிக் கொடுக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போது பயில்வானிடம் பொதுமக்கள் சார்பாக இரண்டு பெண்கள் பேசுவதற்காக வந்திருக்கின்றனர்.
முதலில் அவர்கள் தங்களை அறிமுகம் செய்துவிட்டு பயில்வானிடம் நீங்கள் அடுத்த பெண்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுகிறீர்களே அதற்கு உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்க, அதற்கு பயில்வான் பிரபலங்கள் என்று வந்துவிட்டால் அவர்களுடைய எல்லா விஷயங்களும் மக்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் தெரியாத விஷயங்களை சொல்லுகிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண்கள் நீங்களும் பிரபலங்கள் தானே? அப்போ உங்களுடைய பர்சனல் வாழ்க்கையை குறித்து அடுத்தவர்கள் பேசினால் அது தப்பு இல்லையா? என்று கேட்க அதற்கு பயில்வான் ரங்கநாதன் நான் எந்த தப்பும் செய்யவில்லை. நான் சினிமா துறையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அந்தப் பெண்கள் நீங்களும் சினிமாக்காரர் தானே? நீங்கள் சம்பாதித்து சாப்பிட்ட அதே துறையில் இருப்பவர்களை பற்றி எப்படி உங்களால் இப்படி எல்லாம் பேசத் தோணுகிறது.
ஒருவேளை அங்கு தவறு நடந்தால் கூட அதை ஏன் வெளியே சொல்லி பெருசு படுத்துறீங்க? அது தனிப்பட்டவர்களுடைய பிரச்சனை! அதை அம்பலப்படுத்தி சம்பாதிக்கிறது சரியா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பயில்வான் அந்த பெண்களிடம் நீங்கள் எப்படி இப்போ டிரஸ் போட்டு இருக்கீங்க? இப்படி டிரஸ் போட்டு இருந்தா பார்த்ததும் கையெடுத்து கும்பிடணும்னு தோணும். ஆனா அறையும் குறையுமா டிரஸ் போட்டிருக்கவங்களை பாத்தா கூப்பிடனும்னு தோணுது என்று ரசிகர்கள் சொல்றாங்க.
நான் அந்த மாதிரி டிரஸ் போட்டு இருக்குறவங்களை பற்றி தான் பேசுறேன் என்று சொல்ல, எதிர்தரப்பில் கேள்வி கேட்டு இருந்த பெண்கள் கோபமாகி அப்போ டிரஸ் குறைவா போட்டா நீங்க வா ன்னு கூப்பிடுவீங்களா? என்று கேட்க அதற்கு பயில்வான் நான் அப்படி சொல்லல... ரசிகர்கள் சொல்லுறாங்க. எங்க வீட்டு பொண்ணா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி, பார்க்கிறாங்க கண்ணை உறுத்துற மாதிரி டிரஸ் போடக்கூடாது நடிகை என்பதற்காக அவர்கள் எப்படி வேணாலும் டிரஸ் போட்டுக்கிட்டு போகலாமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு எதிர் தரப்பில் பேசிய பெண் உங்க மனநிலையே தப்பா இருக்கு. நீங்க பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்றதுக்கு நீங்க யாரு என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications