உருகி உருகி ஜொள்ளு வடிக்கும் கோபி...பாக்கியா எடுக்கப்போகும் அதிரடி... இது புது ட்விஸ்ட்??
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் எதிர் வரும் கதைதான் இனி சீரியலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.
எதிர்பாராதவதமாக கோபி போன் பேசுவதை பார்த்து பாக்கியலட்சுமி திகைத்துப் போய் உள்ளார்.

குடும்பத் தலைவியின் கதை
வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. ஒரு சில சீரியல்கள் நெட்டிசன்கள் கைவசம் மாட்டிக்கொண்டு வேற லெவல் வைரல் ஆகி விடுகிறது .அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. காரணம் ஒரு குடும்ப தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக இந்த கதை அமைந்திருப்பதால் இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

போனில் கோபி செய்த செயல்
பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் பாக்யாவுக்கு தெரியாமல் கோபி ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது பொங்கல் விழா கொண்டாடிய தருணத்தில் ஏற்கனவே ஒருமுறை வீட்டிற்குள் கட்டிலில் படுத்தபடியே முகத்தில் புன்னகை தவழ கோபி பேசியதை பார்த்து ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்ததாக பொங்கல் விழா கொண்டாடி விட்டு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் தான் ஆபீஸ் செல்லப் போவதாக கூறியிருக்கிறார், கோபி. அதனால் முதலில் இன்று ஒரு நாள் மட்டும் ரெஸ்ட் எடுக்க சொல்லி எவ்வளவோ சொல்லுகிறார் பாக்கியா. பின்பு கோபி ஆபீஸ் செல்வதற்காக அவருடைய பேக்கை எடுத்து கொடுப்பதற்காக அவருடைய அறைக்குள் வந்திருக்கிறார்.

பாக்கியலட்சுமிக்கு சந்தேகம் வந்தாச்சா?
பாக்கியா மீண்டும் அறைக்கு வந்ததை கவனிக்காத கோபி ராதிகாவுடன் உருகி உருகி ஜொள்ளு விட்டபடியே பேசிக்கொண்டிருக்கிறார் .இவருடைய இந்த வித்தியாசமான பேச்சை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார் பாக்கியா. காரணம் நான்கு நாட்கள் உன்னோடு பேசாமல் எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது என்றும்,தான் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். ..உன்னோட பேசும்போது என்று கோபி உருகிக் கொண்டிருக்கிறார். இவர் எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த ப்ரமோ வேற லெவல் என்று கூறி வருகின்றனர்.

எதிர்பாராத கதை திருப்பம்
ஏற்கனவே கோபியின் அப்பாவுக்கும் எழிலனுக்கும் ராதிகாவுடன் இவருடைய பழக்கம் தெரிந்துள்ளது. ஆனால் எழிலனுக்கு மட்டும் கோபி பேசிக் கொண்டிருப்பது ராதிகாவுடன் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது பாக்கியாவும் பார்த்ததால் இனி கதையில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் ஏழிலன் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடைபெற உள்ளதால் கதை இனி சூடுபடிக்க தொடங்கி இருக்கிறது. இனி பல எதிர்பாராத திருப்பங்களும் கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஏற்கனவே கோபியிடம் முதல் மனைவியை விவாகரத்து செய்ய சொல்லி ராதிகாவின் அம்மா வற்புறுத்தி கொண்டிருக்கிறார் இதனால் அடுத்ததாக கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications