திடீர் பரபரப்பு.. இத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறியே? பாலாஜி முருகதாஸை அடிக்க பாய்ந்த ஆட்டோ டிரைவர்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் நடித்த எஃப்ஐஆர்( FIR) திரைப்பட காட்சிகள் பெண் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பெண்கள் முன்பு போட்டு காண்பிக்கப்பட்ட போது ஒரு பெண் ஆவேசமாகி பாலாஜி முருகதாஸை அடிக்க பாய்ந்து இருக்கிறார்.
மாடலிங் மூலமாக பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று விட்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் அந்த சீசனில் ரன்னராக தேர்வானார். ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த சீசனில் தான் டைட்டில் ஜெயிக்காமல் போனாலும் தனக்கு ரசிகர்கள் அதிகமாக வரவேற்பு கொடுத்ததன் காரணமாகவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்டார். அந்த சீசனில் அவர் வெற்றியும் பெற்றிருந்தார்.அதுபோல இணையத்தில் பயங்கர பிசியாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சி தலைவர்கள் குறித்து கூட விமர்சித்து போஸ்ட் போட்டிருந்தார். இதனால் இவர் மீது திமுக ரசிகர்கள் உறுப்பினர்கள் கோபத்தில் இவரை திட்டினார்கள். தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் பாலாஜி முருகதாஸ் எஃப் ஐ ஆர் (FIR) என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதுபோல இந்த திரைப்படத்தில் நடித்த ரச்சிதாவும் தன்னை ஆபாசமாக சித்தரித்து விட்டதாகவும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் நேற்று பெண் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு போட்டு காட்டப்பட்டது.
அப்போது அங்கிருந்த ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் பாலாஜி முருகதாஸ் சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்து இருக்கிறார். அதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் பல பெண்களை ஏமாற்றி ஜெயிலில் இருக்கும் நாகர்கோவில் காசி கேரக்டரில் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். அதனால் பாலாஜி முருகதாஸிடம் "நீ இத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறாயே.. கல்யாணம் முடிஞ்சவங்க, முடியாதவங்க என்று இத்தனை பேருடைய வாழ்க்கையே நாசமாக்கிட்டயே" என்று அந்த பெண் அடிக்க பாய்ந்து இருக்கிறார்.
அப்போது பக்கத்தில் இருந்தபட குழுவினர்கள் முதலில் அதிர்ச்சியாகின்றனர். பிறகு எல்லோரும் சந்தோஷமாக சிரிக்கிறார்கள். இது ஒரு விதமான ப்ரமோஷனா அல்லது நிஜமாகவே படத்தை பார்த்து அந்தப் பெண் கோபமானாரா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications