"அய்யப்பனும் கோஷியும்" இயக்குனர் கதையில் பாலாஜி முருகதாஸா..!? எங்கேயோ இடிக்குதே!! இப்பவே குழப்பமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:தான் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்.

சமீபத்தில் இணையத்தில் புயலை கிளப்பும் லெவலுக்கு திடீர் திருமணம் செய்திருக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனின் லிப்ரா ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் தலைப்பை பார்த்த இனையவாசிகள் இது அந்த மலையாள படத்தின் ரீமேக்காக இருக்குமோ!? என்று யூகித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் ஆனவர்கள் அவரது படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

மாடலிங் டூ மல்லுகட்டு

மாடலிங் டூ மல்லுகட்டு

மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸாக வெளி உலகிற்கு நன்கு பரீச்சயமானார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரகடு பாயாக ரவுண்டு வந்த பாலாஜி முருகதாஸ் அந்த சீசனின் ரன்னர் லெவல் வரை வெற்றிகரமாக சென்றார். பிக் பாஸ் 4 டைட்டில் வெற்றியாளர் ஆரியுடன் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாலேயே அந்த சீசனில் நன்கு பிரபலமானார். தற்பொழுது வரை இவர்களிடையே இருந்த மோதல் போக்கு இவர்களது ரசிகர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விடாப்பிடியாக வின்னரானார்

விடாப்பிடியாக வின்னரானார்

பாலாஜி முருகதாஸ் நல்ல என்டர்டைனராகவும் போட்டியாளராகவும் கருதிய விஜய் டிவி பிக் பாஸ் பிரைமிலும் அவரை போட்டியாளராக களம் இறக்கியது.பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் பிரைமில் டைட்டில் வின்னராக பட்டத்தை வென்று தான் ஒரு நல்ல போட்டியாளர் என்று நிரூபித்தார். தன்னுடைய சமூக வலைதள கணக்குகளில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி தன்னுடைய மாடலிங் போட்டோக்களையும், ஜிம் போவது பற்றிய டிப்ஸ்களையும் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

விரும்பியடிக்கும் விஸ்கி

விரும்பியடிக்கும் விஸ்கி

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடிய பாலாஜி முருகதாஸ் அவர்களின் பல சுவாரசியமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை கூறியிருந்தார். பாலாஜி முருகதாஸ் தனக்கு விஸ்கி குடிக்க பிடிக்கும் போன்ற விஷயங்களை கூட ஓப்பனாக பேசியிருந்தார். தன்னுடைய அடுத்த படத்தை குறித்த கேட்ட ரசிகருக்கு அதை குறித்த தகவலை அப்போது தெரிவித்திருந்த பாலாஜி தன்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்றும் பட அறிவிப்பை குறித்து அவரே வெளியிடுவார் என்றும் பதிலளித்திருந்தார். ஆனால் தற்போது பாலாஜி முருகதாஸே தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டு இருக்கிறார்.

மார்க்கண்டேயன் மலையாள படமா

மார்க்கண்டேயன் மலையாள படமா

லிப்ரா ப்ரொடக்ஷன் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்கும் தன்னுடைய படத்திற்கு "மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்" என்ற தலைப்பை வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.இந்த தலைப்பை பார்த்த பல இணையவாசிகள் பட தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பிரித்விராஜ் சுகுமார் நடித்த சாக்லெட் படத்தின் ரீமேக்காக இருக்குமோ!? என்று சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.சமீபத்தில் மறைந்த தேசிய விருது பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தின் இயக்குனர் சச்சு கதாசிரியராக அறிமுகமான படம் சாக்லேட் ஆகும்.சாக்லேட் படத்தின் ரீமேக்கா என்று படக்குழு எந்த தகவலும் கூறாத நிலையில், படம் குறித்த உண்மை தகவல்கள் படம் வெளிவந்த பின்னர் தான் தெரியவரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+