நான் வாய்ப்பு கேட்டா.. அவங்க வேற எதிர்பார்த்தாங்க..! ஓபனா சொல்லுறேன்! பாலாஜி முருகதாஸ் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் வில்லனாக நடித்த ஃபயர் திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஃபேன்ஸ் மீட்டிங்கில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் பட்ட அவமானங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் தான் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்தால் சினிமா வாய்ப்பு வந்துவிடும் என்று சிலர் நினைத்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். உண்மையான திறமையும் அதற்கு ஏற்ற உழைப்பும் இருக்கும்போது ஒரு சிலருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது.

சிலருக்கு உழைப்பும் திறமையும் இருந்தாலும் வெற்றி கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகர் பாலாஜி முருகதாஸ் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்வானார். அந்த சீசனில் பாலாஜி முருகதாஸுக்கும் ஆரிக்கும் இடையே சண்டை வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ்க்கு டைட்டில் கிடைக்காததால் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர்தான் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவுமே சூட்டிங் நடத்தப்படவில்லை.

சில திரைப்படங்கள் சூட்டிங் நடைபெற்றாலும் பிறகு அதற்கான வேலைகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டு விட்டனர். இந்த நிலையில் தான் ஃபயர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்ட போதிலும் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பின்னாடி பேசினவங்க, துரோகம் பண்ணுனவங்க எல்லாருக்கும் என்னுடைய அடுத்த படம் தான் என்னுடைய பதில். நான் விரைவில் வெற்றி பெறுவேன். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.

ஆரம்பத்தில் மாடலிங் செய்ய கூப்பிட்டு வேறு படம் எடுப்பதற்காக என்னை தயார்படுத்தினாங்க. நாம மாடலின் வாய்ப்பு கேட்டா அவங்க நம்மிடம் வேற எதிர்பார்த்தாங்க. வேற விஷயத்தை ஓபன் ஆக கேட்டாங்க. அதை இப்போ சொல்ல முடியாது.. என்று கூறியிருக்கிறார்.
அதோடு தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கோடி சம்பளம் கிடைக்கும் என்று கலந்து கொண்டேன் என்றும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் தனக்கு 45 லட்சம் தான் சம்பளம் தந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்பளத்தை வெளியே சொல்ல கூடாது என்று யார் சொன்னார்கள்? நான் ஓபனா சொல்லுவேன் என்று அந்த பேட்டியில் பாலாஜி முருகதாஸ் பேசியிருக்கிறார்.

நான் வளரக்கூடாது, வெளியே தெரியக்கூடாது என்று என்னை தட்டி வைப்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இப்படியே இருக்க மாட்டேன், எல்லா தடைகளையும் மீறி நிமிர்ந்து வருவேன் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications