பிக் பாஸ்ல இவ்வளோ தான் சம்பளம் தந்தாங்க.. இவங்க எல்லாம் தற்குறி! கோபமாக பேசிய பாலாஜி முருகதாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக தேர்வான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் சமீபத்தில் ஃபயர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் சில விளம்பரங்களிலும், புகைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்து விடுகிறது.

பிக் பாஸ் பிரபலங்கள்
100 நாட்களுக்கு தினமும் மக்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்து ரசித்து வருவதால் அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள், அதுபோல வியக்க வைக்கும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. இதனாலேயே இவர்களுக்கு பிரபலமும் கிடைத்து விடுகிறது. அதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் பிரபலத்தின் அடிப்படையில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் நூறு நாட்கள் முடிவடைந்த பிறகு தான் சம்பளம் கொடுக்கப்படும். ஆனாலும் எந்த இடத்திலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுடைய சம்பள விவரங்களை வெளியே சொல்வது கிடையாது.

பிக் பாஸ் சம்பளம்
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வாகி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற பாலாஜி முருகதாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய சம்பள விபரம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
ட்ரோல்களுக்கு பதிலடி
பாலாஜி முருகதாஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு உடனே கமெண்ட் கொடுப்பது அல்லது அதற்காக ஒரு வீடியோ வெளியிடுவது போன்ற பரபரப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது ஆபாசம் இல்லையாம்
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய ஃபயர் திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அப்போது சில தற்குறிகள் ஃபயர் திரைப்படத்தை பார்த்து ஏ படம் என்று சொல்கிறார்கள். இதில் ஏ படம் என்று சொல்லும் வகையில் காட்சிகள் எதுவும் இல்லை. இது ஒரு விழிப்புணர்வு படம். இதை விழிப்புணர்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருக்கிறதா என்று சொல்லுங்கள்? நான் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் என ஆதங்கமாக பேசி இருக்கிறார்.
மரியாதை இல்லாத பேச்சு
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் 1 கோடி கிடைக்கும் என்று போனேன் ஆனால் எனக்கு 45 லட்சம் தான் சம்பளம் கிடைத்தது. பிக் பாஸ் சம்பளத்தை வெளியே சொல்ல கூடாதுன்னு யாரு சொன்னது? நான் சொல்வேன் என்று பேசியிருக்கிறார். அதுபோல தன்னுடைய திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்தவர்கள் பற்றியும் அவன், இவன் என ஒருமையில் அந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications