பாரமுல்லா விமர்சனம்: நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள.. இந்த த்ரில்லரை பார்க்கலாமா, வேண்டாமா?
சென்னை: நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்குடன் கிடைக்கும் ஹிந்தி படமான "பாரமுல்லா" காஷ்மீரை எப்படி காட்டியுள்ளது. படம் பார்க்கலாமா, வேண்டாமா, இதோ விமர்சனம் (Baramulla Review in Tamil).

கதை சுருக்கம்
காஷ்மீரில் உள்ள பாரமுல்லா என்ற ஊரில், பள்ளி செல்லும் சிறுவர்கள் திடீரென காணாமல் போகிறார்கள். அதில் முன்னாள் எம்எல்ஏ மகனும் ஒருவர். இந்த சம்பவங்களை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி (ஹர்மன் பாவ்ரே) பாரமுல்லா வருகிறார். அங்கு, அவரது, குடும்பம் தாங்கள், தங்கியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்யங்களை சந்திக்கிறது. இந்த அமானுஷ்யங்களுக்கும் காஷ்மீரில் சிறுவர்கள் மாயமானதற்கும் ஒரு தொடர்பும் உள்ளது. மேலும், காஷ்மீரில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மற்றும் கொலையான பண்டிட்களுக்குமான முடிச்சும் இதில் கோர்க்கப்படுகிறது. இவைகள்தான் கதையின் மையம்.
பயம் காட்டுவதில் படம் வெற்றி பெறுகிறதா?
படத்தின் தொடக்க காட்சிகள், பாரமுல்லாவின் அழகிய இயற்கை காட்சிகள் மற்றும் பயங்கரமான சூழ்நிலையை நன்றாக காட்டுகின்றன. நடிகர்கள் அனைவரும் தங்களது பாத்திரங்களில் நன்றாக நடித்து உள்ளனர். படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலி அமைப்பு பார்ப்பவரின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் படங்களை பார்த்து பழகிய தமிழ் ஆடியன்சுக்கு பெரிய அளவுக்கு பயத்தை உருவாக்காது என்பது வேறு விஷயம்.
ஆனா, படத்தின் இரண்டாம் பாதில, கதை மெதுவா நகர்றது மாதிரி தோணலாம். முதல் பாதில, இவுங்க ஏத்திவச்ச பில்ட்அப்பை இரண்டாவது பாதி பெருசா காப்பாற்றதுதான் அதற்கு காரணம். கொஞ்சம் சென்டிமென்ட் ஸீன்களும் அதிகமாகுவதால் முதல் பாதி மாதிரி இல்லையேன்னு தோண வைக்கலாம். ஆனால், இயக்குநரின் நோக்கம், அந்த சென்டிமென்ட்கள்தான் என்பதால், அதை ஒன்னும் செய்ய முடியாது.
படம் அதன் இறுதியில், கடந்த கால காயங்களைத் துளைத்து சீழ்பிடிக்க வைக்கும் ஒரு சான்றாக மாறிவிடுகிறது. அதேநேரம், எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று காட்டுவதற்காக சில கேரக்டர்களை ஹீரோ குடும்பத்திற்கு உதவிகரமாக இருப்பதை போல தொடர்ந்து காட்டியுள்ளதற்காக இயக்குநரை பாராட்டலாம்.
மர்மமான சூழ்நிலையை உருவாக்குவதில் படம் ஆரம்பத்தில், வெற்றி பெறுகிறது, ஆனால் மர்மத்தை உடைக்கும் காட்சிகளில் ராகவா லாரன்சிடமிருந்து இயக்குநர் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியது பாக்கி உள்ளது. ஹாரர் த்ரில்லரா, இன்வெஷ்டிகேஷன் த்ரில்லரா என்பதில் இயக்குநர் கொஞ்சம் குழம்பிவிட்டார். எனவே இரு பக்கமும் கதை போய் போய் திரும்புகிறது. எனவே சீட் இருக்கையில் இறுத்தி பிடித்து வைப்பதில் கதை தவறுகிறது.
பார்க்க வேண்டுமா?
"பாரமுல்லா" படம், வெறும் ஹாரர் அல்லது த்ரில்லர் படம் மட்டுமல்ல, காஷ்மீர் ஃபைல்ஸ் கூறிய பண்டிட் வரலாற்றை கலந்து உருவாக்கி காட்டப்பட்ட கதை. படத்தில் அவர்கள் இருக்கிறார்கள் ஆனால் இல்லை என்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரொம்ப கம்மி போல உள்ளது. வீட்டையும், நாலு தெருவையும் ஒரு ஏரியைுயம் தாண்டி கேமரா வேறு பக்கம் போகவில்லை. காஷ்மீர் இயற்கை பின்னணியில் ஒரு மர்மம் மற்றும் Thrill ஜானர் படங்களை விரும்புவோருக்கு, கொஞ்சம் தீனி போடும். 5-க்கு, 2.5 மார்க் தரலாம்.
முக்கிய தகவல்கள்
- படம்: பாரமுல்லா
- ஓடிடி தளம்: நெட்பிளிக்ஸ்
- வகை: இயற்கைக்கு அப்பாற்பட்ட ஹாரர் (Supernatural Horror)
- மொழி: இந்தி (தமிழ் உட்பட பல மொழிகளில் டப்பிங் வசனம்)
கூடுதல் தகவல்
- நடிப்பு: ஹர்மன் பாவ்ரே, மிரால் ஜான், கே.கே. மேனன்
- இயக்குநர்: விகாஸ் பாலி
இந்த ரிவ்யூ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!












Click it and Unblock the Notifications