Barathi Kannamma Serial: கண்ணம்மா கருப்புதான் அதனால என்ன இப்போ?!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் நம்ப முடியாததையும் நம்ப வைக்கும் விதமாக இருக்கிறது.
கருப்பு பிடிக்காத சவுந்தர்யா அம்மா இன்னும் இப்படிப்பட்ட மனுஷிகள் இருக்கிறார்களா என்று வியக்கும் அளவுக்கு கருப்பு கருப்பு என்று கருப்பு நிறமானவர்களை வெறுத்து ஒதுக்கறாங்க.
தனது சொந்த பேத்தியையே கருப்பு என்பதால் இன்னும் தொடவில்லையாம். சவுந்தர்யா அம்மா. இப்படிப்பட்டவங்க வீட்டுக்கு கருப்பு கண்ணம்மா மருமகளா போகிறாள்.

கல்யாணம் கண்ணம்மா
கருப்பு கண்ணம்மாவை சவுந்தர்யா அம்மாவின் மூத்த மகன் பாரதி காதலிச்சு அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துக்கறான். கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியை பாரதியின் தம்பி அகிலனுக்கு பேசி முடிக்கறாங்க.இவளும் அழகி என்பதால் அக்கா கருப்பு கண்ணம்மாவை வெறுத்து ஒத்துக்கிடறா. கல்யாண பெண் அஞ்சலியும் சவுந்தர்யா அம்மாவுடன் சேர்ந்துகொண்டு, கல்யாணத்துக்கு கண்ணம்மா வர கூடாது அத்தைன்னு சொல்லிவிடுகிறாள். .

எங்கம்மா கண்ணம்மா?
கண்ணம்மாவை வீட்டில் விட்டுட்டு எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடறாங்க. பாரதி கண்ணம்மா எங்கேம்மான்னு கேட்க, இங்கேபாரு பாரதி..இதைப் பத்தி எல்லாம் இங்கே பேசிக்கிட்டு இருக்க முடியாது.இந்த கல்யாணத்துக்கு யார் யாரெல்லாம் வந்து இருக்காங்க தெரியுமா? அவங்க முன்னால அந்த அழகு ஓவியத்தை என் மருமகள்னு சொல்லிக்க சொல்றியேன்னு கேட்டு பாரதியின் வாயை அடைச்சுடறாங்க.

காணோம் தாலியை
ஐயர் தாலியை எடுத்து குடுங்க பூஜை செய்யணும்னு கேட்கிறார். அப்போதுதான் எல்லாரும் தேடறாங்க தாலியை காணோம். எல்லாத்தையும் எடுத்து வச்சேன் தாலியை மறந்துட்டேன்மான்னு மகள் சுருதி சொல்ல, அவளை திட்டறாங்க. அவளை ஏன் திட்டறே சவுந்தர்யா.. கண்ணம்மா கல்யாணத்துக்கு வர கூடாதுன்னு கவனம் செலுத்தின நீ இதில் கவனமா இருந்து இருக்கணும்னு திட்டறார் கணவர்.

தாலியை தொட்டுட்டாளாம்
உடனே கண்ணம்மாவை விட்டு தாலியை எடுத்துட்டு வர சொல்லி போன் பண்றாங்க சுருதி.கண்ணம்மா அவசரமாக தாலியை எடுத்துட்டு வருகிறாள். அவளைப் பார்த்த சவுந்தர்யா அம்மா டென்ஷானாகி நிக்கறாங்க. பாரதி மகிழ்ச்சியில் இருக்கிறான். சவுந்தர்யா அம்மா கண்ணம்மா கையில் இருக்கும் தாலியை வெறுப்போடு பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, இவ கையால் தொட்ட தாலியா இந்த கல்யாணம் இனி நடக்காதுன்னு கத்தறாங்க.
இதெல்லாம் இப்போதும் நடக்கிறதா என்று எண்ணும்படி இருந்தாலும் பார்க்கத்தானே செய்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications