Barathi kannamma serial: கண்ணம்மாவை இப்படி கஷ்டங்கள் சுத்தி நின்னு கும்மியடிச்சா எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு கஷ்டம் தேடித் தேடி வந்து அவளை சுத்தி நின்னு கும்மி அடிக்குது. பார்க்க பாவமாக இருக்கிறது.

சவுந்தர்யா அம்மா வீட்டின் மூத்த மருமகள் கண்ணம்மா கருப்பு கண்ணம்மாவாக இருப்பதினாலேயே, அந்த வீட்டின் வேலைக்காரியாக இருக்கிறாள். நிஜமான வேலைக்காரி பாவம் பார்த்து குடிக்க ஜூஸ் கொடுக்கிறாள்.

ஆனால், கண்ணம்மா வைங்க நான் அப்புறம் குடிக்கறேன்னு சொல்லிட்டு, டேஸ்ட் பார்க்கும் போது சர்க்கரை இல்லையே சர்க்கரை போடலைன்னு சொல்லி சர்க்கரை போட்டு கலக்கறா.

அன்பே அஞ்சலி

அன்பே அஞ்சலி

இதற்கு முன்பே கண்ணம்மாவின் அன்புத் தங்கை அஞ்சலி, கண்ணம்மாவுக்கு தெரியாமல் விஷ மாத்திரையை கலந்து வச்சுட்டு போய் விடுகிறாள். கண்ணம்மா சர்க்கரைபோட்டு குடிக்கப் போகையில், அறிவு மணி அஞ்சலி அப்பவே பசிக்குதுன்னு சொன்னான்னு சொன்னது நினைவுக்கு வர, .. ஜூஸ் போட்டு அறிவுமணி கையில் நீ போட்டேன்னு சொல்லி இந்த ஜூஸை குடுன்னு சொல்றா கண்ணம்மா.

ஆனால் நடந்தது

ஆனால் நடந்தது

அஞ்சலிக்கு அகிலனுடன் நடந்த இந்த கல்யாணத்தில் துளியும் இஷ்டமில்லை.அவளுக்கு ஆசை எல்லாம் பாரதி மாமா மேலதான். ஆனால், பாட்டி திட்டிய பிறகு மனசை மாத்திக்கிட்டு, பாரதி மாமாவை கல்யாணம் செய்துக்கிட்ட அஞ்சலியை இந்த வீட்டில் வாழ விட கூடாது என்பதுதான். அதனால், அகிலனுடன் முதலிரவு நடப்பதில் அஞ்சலிக்கு இஷ்டம் இல்லை.முதலிரவை நிறுத்த கண்ணம்மாவுக்கு ஜூஸில் யாருக்கும் தெரியாமல் மிதமான விஷ மாத்திரை கலந்து விடுகிறாள்..

போட்ட ஜூஸ்

போட்ட ஜூஸ்

ஜூஸை அறிவு மணியிடம் இருந்து வாங்கிய அஞ்சலி, என்னாது நான் போட்ட ஜூஸ் எனக்கே வந்துருச்சான்னு யோசிக்க, என்ன அஞ்சலி யோசிக்கறா...பசிக்குமில்லை இதை குடி.அப்புறம் நான் பால் எடுத்துட்டு வரேன்.அப்பவே பசிக்குதுன்னு சொன்னே.. கண்ணம்மா கையாலப் போட்டு குடுத்தா நீ குடிக்க மாட்டே அதான் நான் கொண்டு வந்தேன்னு சொல்றா.

ஆசையாக அகிலன்

ஆசையாக அகிலன்

அகிலன் ஆசையாக வர, அங்கு பால் பழம் எல்லாம் இருக்கிறது. நீ இந்த பாலை குடின்னு சொல்லி குடுத்துட்டு போறா.கண்ணம்மா ஜூஸை குடிச்சு இருப்பாளா, இல்லை பிடிக்காத தாம்பத்தியத்தில் நான் நுழைய விரும்பாமல் . நான் தற்கொலை பண்ணிக்க போகிறேனான்னு குழப்பத்திலிருக்கா.

அகிலன்.நான் இந்த ஜூஸை குடிக்கறேன். நீ பாலைக் குடின்னு சொல்லி ஜூஸை குடிக்கறேன்னு சொல்லி குடிக்கிறாள்.மயங்கி விழுந்து விடுகிறாள். உயிருக்கே ஆபத்து என்கிறார்கள்.

கண்ணம்மா ஜூசில் சர்க்கரை கலந்ததை பார்த்துவிட்ட சவுந்தர்யா அம்மா,கண்ணம்மாதான் ஜூஸில் விஷத்தை கலந்துட்டான்னு சொல்லி அவளை அடிக்கறாங்க.

கறுப்புதான் நமக்கு பிடிச்ச கலருன்னு உலகம் எப்போது மாறும்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+