Barathi Kannamma Serial: பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா!
Recommended Video
சென்னை: பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா என்று, பொண்டாட்டி கண்ணம்மாவின் மீது கொள்ளை ஆசை வைத்து இருக்கும் பாரதியை விட்டு கண்ணம்மா பிரிந்து போகப் போகிறாளாம்.
காரணம் ரொம்ப சப்பையா இருக்குதுங்க. கவிதை எழுத தெரிஞ்ச பெண்ணுக்கு, பொறுமையில் பூமி மாதாவின் மறுபெயர் எடுத்த கண்ணம்மாவுக்கு இப்போது மட்டும் பொறுமை இல்லாமல் போனது ஏனோ?
புருஷனிடம் சொல்லாதே என்று ஒரு பெண் சொன்னால், அதை அப்படியே கேட்கும் அளவுக்கு முட்டாள் பெண் என்று கண்ணம்மாவை காட்டி இருப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை.

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரியும் கண்ணம்மாவுக்கு... கோவத்துல பேசறாங்க.. அதை எல்லாம் நாம் பெரிசா எடுத்துக்க கூடாதுன்னு எல்லாரும் கருப்பு கண்ணம்மான்னு கிண்டல் செய்த போது கூட அவளுக்கு கோவம் வராது.பொறுமையை கடைப்பிடிக்க அவங்க திட்டுவதை எல்லாம் நான் பாட்டு கேட்பது போல நினைச்சுக்குவேன்னு சொல்ற கண்ணம்மாவுக்கு பாரதியை விட்டுட்டு எங்கியாவது போற அளவுக்கு தைரியம் எப்படி வரும்?

நல்ல கலாச்சாரமா?
எதாவது பிரச்சனை என்றால் இளம் பெண்கள் வீட்டை விட்டுப் போவது என்ன கலாச்சாரம்? பிரச்னையை சந்திக்க அல்லது மனம் விட்டு கணவனுடன் பேச முற்பட மாட்டார்களா? வெண்பா எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மின்னு சொல்றாங்க.. நீங்க டாக்டர் பாரதி மாமா நீங்க டெஸ்ட் எடுங்க எனக்குன்னு ஒரு பொண்டாட்டி புருஷனை நம்ப மாட்டாளா?

இன்னொசென்ட் பொண்டாட்டி
என்னதான் இன்னொசென்ட் பொண்டாட்டி என்றாலும், தாம்பத்ய விஷயத்தில் நல்ல விவரமாகத்தான் அந்த பொண்டாட்டி இருப்பாள். அதோடு, புருஷன் பேச்சை தட்டாதவளாகவும் இருப்பாள். புருஷனிடம் எதையும் மறைக்காதவளாகவும் இருப்பாள். அப்படித்தான் இதுவரை கண்ணம்மாவை காண்பித்த இயக்குநர் இன்னிக்கு திடீர்னு குழந்தை பிறப்பு விஷயத்தில் எங்கிருந்தோ பாரதியின் தோழி என்று வந்த வெண்பாவின் பேச்சை கேட்டு, வீட்டை விட்டுப் போக முடிவெடுக்கிறாளாம்.

பூ சுத்துறீங்க
காதுல பூ சுத்தறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிச்சு வச்சு கதையை ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டீங்க... நாங்க கூட கண்ணம்மா தன்னை கருப்புன்னு ஒதுக்கின அத்தையை தன்னை விரும்பும்படி மாத்துவான்னு நினைச்சுகிட்டு இருந்தோம். நீங்க வேற டிராக்கில் பயணிக்க நினைக்கறீங்க..
பெண்கள் பிரச்னையை கண்டு பயந்து வீட்டை விட்டு போகும் காட்சியை எல்லா சீரியல்களிலும் பார்த்து சலிச்சு போச்சுங்க.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications