கணவரை பிரிந்து விட்டேன்.. ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் Bassist மோகினி டே திடீர் பதிவு
சென்னை: பாசிஸ்ட் அமைப்பாளர், ஏற்பாட்டாளர் மற்றும் தயாரிப்பாளராக பிரபலமடைந்த மோகினி டே கணவர் மார்க் என்பவரை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மோகினி டே இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் வேலை பார்ப்பவர்தான்.
சமீப காலமாகவே பல பிரபலங்கள் தொடர்ச்சியாக விவாகரத்து செய்தி வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். நேற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தான் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து ஏ ஆர். ரஹ்மானும் அந்த செய்தி உண்மை என்பதை அறிவித்திருந்தார். இந்த செய்தி பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சாய்ரா பதிவு வெளியிடுவதற்கு முன்பே ஏ.ஆர் ரகுமானிடம் வேலை பார்க்கும் மோனிடே என்பவரும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்து இருக்கிறார்.
மோகினி டேய் பாசிஸ்ட் இசையமைப்பாளராகவும், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தல் மற்றும் தயாரிப்பாளர் பாடகர் என்று பல முகங்களை வைத்திருக்கிறார் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 522k பாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள். தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தான் கச்சேரிகளில் கலந்து கொள்ளும் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய கணவரை பிரிவதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் கனத்த இதயத்துடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். மார்க் மற்றும் நானும் பிரிந்து விட்டோம் என்பதை அறிவிக்கிறோம். முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பேசி பரஸ்பரமாக இந்த முடிவு எடுத்திருக்கிறோம்.

எங்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. அதனால் மனமுவந்து பிரிந்து விடுவது தான் சரி என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். MaMoGi மற்றும் Mohini day சேர்ந்தே நாங்கள் வேலை செய்வோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதில் எப்பொழுதுமே பெருமையாக இருக்கும் எனவே அது தற்போதைக்கு நிற்காது.
உங்களின் அனைவருடைய ஆதரவுக்கு நன்றி நாங்கள் எடுத்த முடிவை தயவு செய்து கௌரவித்து இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்க வேண்டுகிறேன். எங்களின் தனிப்பட்ட சுய விருப்பங்களை நீங்கள் மதிக்க வேண்டுகிறேன். நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications