அடேங்கப்பா பொண்ணுன்னா ஆனந்தி மாதிரி இருக்கணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல், வழக்கமான சீரியல்களில் இருந்து மாறுபட்டு பயணிக்குதுன்னு சொல்லலாம்.

எப்படி சொல்றோம்னா எப்பவும் ஹீரோயின் எதிரிகளின் சதியில மாட்டி, அழுது வடிவதா இருக்கும். ஆனா, இந்த சீரியலில் எதிரிங்க என்ன திட்டம் போட்டாலும், அதை சிதைச்சு தூள் தூளாக்கிடறாங்க.

ஆனா, பாவம் ஹீரோயின் தோழி கண்மணியின் எதிரி சுகாசினி. இவள் கண்மணியின் புருஷன் மேல ஆசைப்பட்டு கண்மணிக்கும் விரிக்கும் சதி வலையை ஓரிரு சமயங்களில் உடைத்தாலும், பல சமயங்களில் மாட்டிகிட்டு தவிக்கறா.

சதி

சதி

சுகாசினியின் சதிவலையில் கண்மணி அடிக்கடி மாட்டிக்கறதுனாலதான், இதுவரைக்கும் பாவம் கண்மணிக்கும், செழியனுக்கும் முதலிரவு கூட நடக்கலேன்னா பாருங்களேன். ஒரு வருஷத்துக்கு மேலாகியும் முதலிரவு நடக்காம கண்மணி கஷ்டப்படறா.

அனு, அனன்யா

அனு, அனன்யா

ஆனந்திக்கு அனுவும், அனன்யாவும் சேர்ந்து செய்யும் சதி வலையை ஆனந்தி வெகு எளிதாக முறியடிச்சுக்கிட்டு வர்றா. ஆனந்தி கெட்டவன்னு திருவுக்கு பொய்யா ப்ரூஃப் பண்ணி, அனன்யாவை கிட்ட நெருங்க வைக்க அனு, அனன்யா ரெண்டு பேரும் சதித்திட்டம் போடறாங்க.

ஆனந்தி

ஆனந்தி

ஆனந்தி போட்டோவை தன்னோட ஆண் ஃபிரண்ட்ஸ்கிட்ட குடுத்து உன்னோட சேர்த்து மார்பிங் செய்துக்கோ. அவளை இந்த போட்டோவை காட்டி, ரெசார்ட்டுக்கு வர சொல்லு, வந்த உடனே, அவளுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு அவள் உடைகளை கலைச்சு விடுன்னு சொல்றாங்க அனுவும், அனன்யாவும்.

இவ்ளோதானா

இவ்ளோதானா

பூ.. உடைகளை கலைச்சு விடறது மட்டும்தானா... நான் கூட ஆசையா இருக்கேன்னு சொல்றான். டேய்.. வேற எதுவும் பண்ண கூடாது. உனக்குத்தான் நான் பணம் தர்றேன்னு சொல்றேன்ல அது போதாதான்னு கேட்கறா.

கெட்டது

கெட்டது

கடைசியில் திரு வந்து ஆனந்தி அலங்கோலத்தை பார்ப்பான்னு நினைச்ச அனுவுக்கு, தான் அலங்கோலமா கிடக்கற மாதிரியான நிலை வந்திருந்து.திரு வந்திடறான்.. அனுவுக்கு ஜூஸ் குடுக்கற மாதிரி குடுத்து, அவள் உடைமேல் ஜூஸை கொட்டிய அவளது நண்பன், பாத்ரூம் போயி ஃபிரஷ்-அப் ஆயிட்டு வான்னு சொல்றான்.

நியூட் வீடியோ

நியூட் வீடியோ

பாத்ரூமில் கேமிரா செட் செய்து, அனு எல்லா ஆடைகளையும் கழற்றி ஜூஸை கழுவ, அது வீடியோவில் பதிஞ்சுருது. அதை வச்சு ஆனந்தி வருவதுக்குள்ள ஒருத்தன் ஒரு ரூமில் அனுவை மிரட்டிக்கிட்டு இருக்கான்.

ரூமில்

ரூமில்

இன்னொரு ரூமில் ஆனந்திக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்க முயற்சிக்க, அவனை அடிச்சு துவைச்சு அனுவையும் காப்பாத்தறா ஆனந்தி. திருவும் வந்துடறான். அனுவை இவ்ளோ கேவலமான வேலை எல்லாம் செய்வியா அனுன்னு திட்டறான்.

லாக்கப்பில்

லாக்கப்பில்

ரவுடிகளை லாக்கப்பில் வச்சுட்டு, போலீஸ் கம்ப்ளைண்ட் எழுதித் தர சொல்லி கேட்கறார். அனு, என்னால் முடியாது... அவன் இது போல நிறைய வீடியோ வச்சு இருக்கான்னு சொல்றீங்க. மீடியாவுல என் பேரு நாறும்.. அப்பா பேரு கெட்டுடும்னு சொல்றா.

பொண்ணு

பொண்ணு

இல்லைம்மா.. உங்க பேறே வெளியில் தெரியாதுன்னு போலீஸ் சொல்ல, என்ன சார்.. இப்போத்தானே தூத்துக்குடி சம்பவத்துல போலீஸ் தரப்புல, அந்த பொண்ணை பேரை சொல்லி காட்டிக் குடுத்தீங்க..அந்த பொண்ணு இதுனால படற கஷ்டம் எவ்ளோ தெரியுமா?

பொறுப்பு

பொறுப்பு

இந்த விஷயத்துல மீடியாவுக்கு பொறுப்பு இல்லை சார்.. தூத்துக்குடி சம்பவம் தொடர்பு புது வீடியோ ரிலீஸ்னு என்னவோ படம் ரிலீஸ் ஆகற மாதிரி ஃபிளாஷ் நியூஸ் போடறாங்க...டெல்லி நிர்பயா சம்பவத்துல இன்னும் நிர்பயான்னுதான் சொல்றாங்க. அந்த பொறுப்பு இங்க இல்லையே சார். நான் எல்லாத்தையும் குத்தம் சொல்லலை.. சிலர் செய்யற தப்புனால எல்லாருக்கும் கெட்ட பேரு வருது.

இப்படி மீடியாவையும், போலீசையும் பொளந்து கட்டறா ஆனந்தி. இது பெண்கள் தைரியமா இருக்கணும்னு சொல்ற மாதிரியான காட்சி என்பதால் பகிர சந்தோஷமாத்தான் இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+