நடிகை சௌந்தர்யா வயிற்றில் 2 மாத கரு.. லாஸ்ட் தருணம்.. பெரிய ஹீரோவும் நடிக்க பிரியப்பட்டார்: பிரபலம்
சென்னை: பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல .. கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் 2 மாதங்களுக்கு முன்பு புகார் மனு தந்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.. .. இதைத்தொடரந்து நடிகை சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவரது கணவர் ரகு விளக்கம் அளித்து, அறிக்கை வெளியிட்டு, நிலவிவந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சௌந்தர்யா பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பிரபல நடிகை செளந்தர்யா என்றாலே சின்சியாரிட்டியானவர் என்று அர்த்தமாம்.. உதாரணத்துக்கு இவன் படத்தில், "'எனை என்ன செய்தாய் வேங்குழலே" பாட்டை ஷூட் செய்து கொண்டிருந்தபோது, சௌந்தர்யாவுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாம்..

ஆனாலும் மாத்திரை போட்டுக்கொண்டு, ஷூட்டிங்கில் சூப்பராக நடித்து தந்துட்டாராம். இதை அவரது சின்சியாரிட்டிக்கு உதாரணமாக டைரக்டர் பார்த்திபன் அடிக்கடி சொல்லி நினைவுகூர்வார்.
அழகானவர் - மென்மையானவர்
இந்நிலையில், Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், சில்க் ஸ்மிதா போல ஒரு பேரழகிதான் சௌந்தர்யா.. அனைவராலுமே விரும்பப்பட்டவர்.. மென்மையான குணம் கொண்டவர் சௌந்தர்யா.
கன்னடத்தில் சௌந்தர்யாவின் அப்பா ஒரு தயாரிப்பாளர்.. எனவே முதல்படம் கன்னடத்தில்தான் நடித்தார்.. கன்னட தயாரிப்பாளர்தான், பொன்னுமணி படத்தையும் தயாரித்தார்.. அப்போதுதான் தமிழில் பொன்னுமணி என்ற படத்தில் அறிமுகமானார் செளந்தர்யா.
முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.. வலுவான கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் செளந்தர்யா.. அதற்கு பிறகு ரஜினி, விஜயகாந்த், கமல் என அடுத்தடுத்த நடிகர்களுடன் நடித்தார்..
சௌந்தர்யா நடிப்புத்திறமை
தமிழ், தெலுங்கு உட்பட அவரது படங்கள் எல்லாமே மென்மையான கேரக்டர்களாகவே அமைந்தன.. இதனால் தன்னுடைய நடிப்பு திறமையையும் எளிதாக அவரால் வெளிப்படுத்த முடிந்தது.. எனவே,
பெரிய பெரிய நடிகர்கள், செளந்தர்யாவுடன் நடிக்க பிரியப்பட்டார்கள்.. அந்தவகையில், குறைந்தபட்சம் 2 படங்களாவது டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார் சௌந்தர்யா.
டைரக்டர் ஆர்.வி. உதயகுமார்தான் செளந்தர்யாவை பொன்னுமணி படத்தில் அறிமுகப்படுத்தினார்.. சௌந்தர்யாவுடன் கடைசியாக பேசியதும் உதயகுமார்தான்.. இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு ஹெலிகாப்டரிலிருந்தே பேசியிருக்கிறார்..
சிதறிய ஹெலிகாப்டர்
"சார், உங்களை என் வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க எனக்குக் கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனால், இப்போது எனக்கு இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கல" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.. அதற்கு ஆர்வி உதயகுமார், "என்னம்மா ஆச்சு? அப்படியெல்லாம் பேசாதீங்க, புகழின் உச்சத்தில் நீங்கள் இருக்கிறீங்க" என்றெல்லாம் தைரியமும், ஆறுதலும் சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகு 10 நிமிடத்தில் ஹெலிகாப்டர் வெடித்துவிட்டது.
செளந்தர்யா தன்னுடைய உறவினரையே திருமணம் செய்து கொண்டார்.. கணவர்தான், முதலில் பாஜகவில் இருந்துள்ளார்.. அதற்கு பிறகே செளந்தர்யா கட்சிக்குள் அழைத்து வரப்பட்டார்.. அரசியலுக்கு வந்தபிறகுதான், செளந்தர்யாவுக்கு நிறைய டார்ச்சர்கள் வந்துள்ளன.. சாகும்போது 2 மாத கரு செளந்தர்யா வயிற்றில் இருந்துள்ளது.
கோலார் தங்கவயல்
இன்னொரு இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக, கோலார் தங்க வயலிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பியிருக்கிறார்.. அந்த விபத்து இயற்கை கோளாறா? விபத்தா? என தெரியவில்லை..
விபத்து குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து சொன்னார்கள்.. 45 அடி உயரத்திலிருக்கும்போதே பைலட் ஹெலிகாப்டரை வளைத்து விட்டார் என்றார்கள்.. அதேபோல, அந்த ஹெலிகாப்டரில் ஏற்கனவே கோளாறுகள் இருந்ததாகவும் , பழைய ஹெலிகாப்டரில் ஏன் சௌந்தர்யாவை அழைத்து செல்ல வேண்டும்? என்றும் பலரும் அப்போது கேள்வி எழுப்பினார்கள்.
சௌந்தர்யாவுடன் கடைசியாக நடித்த தெலுங்கு ஹீரோ, சௌந்தர்யா இறந்த அடுத்த 15 நாளில், கார் விபத்தில் இறந்துவிட்டார்.. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் அந்த நடிகர்.. ஆனால், இரண்டுமே வெவ்வேறு இடத்தில், நடந்த விபத்துகள் என்றாலும், கடைசியாக ஒன்றாக நடித்தவர்கள் என்பதால், இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications