சூர்யாதேவி முதல் ஐபிஎல் வரை.. சர்ச்சை நாயகன் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்
சென்னை: விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு இன்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது எது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் தனது பேச்சு, காமெடி, உடல்மொழி போன்றவற்றால் பலரை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பெண் வேடம் ஏற்று நடிப்பார். மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். இந்த சேனலுக்கு வியூஸை அதிகரிக்க அவர் சர்ச்சையில் சிக்கியதாகவும் பலர் கூறுகிறார்கள். லாக்டவுன் நேரத்தில் வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது நாஞ்சில் விஜயன், தனக்கு தெரிந்த மற்றொரு யூடியூபரான சூர்யா தேவியை தூண்டிவிட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் தனது யூடியூபில் வனிதாவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ஒரு கட்டத்தில் வனிதா வசிக்கும் அபார்ட்மென்ட்டிற்கு கூட அவர் சென்றிருந்தார். இந்த நிலையில் சூர்யா தேவி எதிலாவது சிக்க மாட்டாரா என வனிதா தேடிய போது அவருக்கு ஒரு புகைப்படம் கிடைத்தது. அதை வெளியிட்டார். அதாவது நாஞ்சில் விஜயனும் சூர்யாதேவியும் கையில கிளாஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அப்போது சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவர் இரு முறை விவாகரத்தானவர் என்றும் அவரது வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது என்றும் அவருக்கும் அவரை பேட்டி எடுத்த நாஞ்சிலுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் இருவரும் சேர்ந்து என்னை அவதூறாக பேசுகிறார்கள் என்றும் புகார் கூறிய வனிதா இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதனால் கோபமடைந்த சூர்யாதேவி, நானும் நாஞ்சிலும் நண்பர்கள்தான். தேவையில்லாமல் நாஞ்சிலின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என தெரிவித்தார். இதனால் நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யாதேவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து நாஞ்சில் விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எனக்கு சூர்யாதேவியை 5 ஆண்டுகளாக தெரியும். சூட்டிங் வரும் போது பார்த்ததுதான். அவரை இன்டர்வியூ எடுக்க என்னை அழைத்தார். அதுதான் எனக்கு பிரச்சினையாக மாறிவிட்டது.
உடனே என்னை பற்றியும் என் தொழிலை பற்றியும் அவர் அவதூறாக வீடியோ வெளியிட்டு போட்டார். நான் உடனே அவரை தொடர்பு கொண்டு உனக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, என்னை பற்றி பேசாதே என கூறினேன். ஆனாலும் தொடர்ந்து என்னை பற்றி பேசிக் கொண்டே இருந்தார். அவரை பற்றி எனக்கு ஒரு சில தனிப்பட்ட விஷயங்கள் தெரியும். அவர் ஒருவருடன் பழகி கருக்கலைப்பு செய்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். அவருடைய தவறான புகைப்படங்கள் எல்லாமே என்னிடம் இருக்கிறது. எனக்கு வனிதாவுக்கு தொடர்பு இருப்பது போல் பேசினார். நான் ஏதோ தவறான புகைப்படங்களை வெளியிட்டதாக என் மீது சூர்யாதேவிக்கு கோபம் ஏற்பட்டது.
இந்த ஆத்திரத்தில் ஒரு நாள் இரவு சூர்யாதேவி என் வீட்டுக்கு 3 ரவுடிகளை அனுப்பினார். அப்போது நடிகை சீபா உள்ளிட்டோருடன் நான் என் வீட்டில் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது வந்த ரவுடிகள் என்னையும் ஷூட்டிங்கில் இருந்த பெண்களையும் அடித்தனர். மேலும் என்னை தெரு முனைவரை அரைநிர்வாணமாக அந்த ரவுடிகள் ஓடவிட்டு கடுமையாக தாக்கினார்கள். இதையடுத்து நானும் என் வீட்டில் தாக்கப்பட்ட பெண்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்.

இதன் பிறகு அடுத்த நாள் சூர்யா தேவி மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இரு ஆண்டுகள் ஆறப்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்தனர்.
அண்மையில் கூட ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் சிக்கினார். பிரபல நடிகை ஒருவருடன் சேர்ந்து 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை பிளாக்கில் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன. இப்படி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
குடும்பத்தினர் மத்தியில் மிகவும் எளிமையாக நாஞ்சில் விஜயனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களை தற்போது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications