நடிகை ராதா புகாரை தாண்டி.. சினிமா குடும்பங்களில் தொடரும் சொத்து சண்டைகளின் இன்னொரு பக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடன்பிறந்தவர்கள் என்றால் குழந்தைகளாக இருக்கும்போது எவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள்? ஒருத்தருக்கு ஏதாவது என்றால் இன்னொருத்தர் ஓடிப் போவார்கள். ஒரே வீட்டில் வளர்ந்து, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே கஷ்டத்தை பார்த்து, வாழ்க்கையில் ஒரு பாதையை ஒன்றாக கடந்திருப்பார்கள். ஆனால் வயதாகி பெற்றோர் விட்டு சென்ற சொத்து, வீடு, நிலம், பணம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய நேரம் வரும்போது அதே உறவுகளுக்குள் கணக்கு வேற மாதிரி ஆரம்பித்து விடுகிறது.

இது உனக்கு... இது எனக்கு என்று பிரிக்க ஆரம்பித்ததும் அதுவரை இல்லாத பல கேள்விகள் வந்து நிற்கும். யார் அதிகமாக சம்பாதித்தார்? யார் குடும்பத்தை கவனித்தார்? யார் அதிகம் செலவு செய்தார்? யார் இந்த இந்த சொத்துக்கு அதிகமாக உரிமை கொண்டாடலாம்? இப்படி ஆரம்பிக்கும் கணக்கு சில நேரங்களில் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்க்க முடியாத அளவுக்கு போய்விடும். இப்போது நடிகை ராதா அளித்திருக்கும் புகார் அந்த மாதிரி ஒரு குடும்பப் பிரச்சனையை மீண்டும் பேச வைத்திருக்கிறது.

Radha

ராதா கொடுத்த புகார்

என்னோட அக்கா அம்பிகா மீது மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரர் மல்லிகார்ஜுனா நாயர் என்கிற அர்ஜுன் மீதும் ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். தன்னுடைய அறையில் வைத்து இருந்த கையெழுத்திட்ட செக்கை பயன்படுத்தி விட்டதாகவும், அவற்றின் மூலம் சுமார் 46 கோடி மதிப்பிலான ட்ரான்ஸ்ஷாக்ஷன் மேற்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் அந்த புகாரில் சொல்லி இருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது இது வெறும் சொத்து யாருக்கு என்ற பிரச்சனையை மட்டுமல்லாமல் நான் நம்பியவர்களாலே இப்படி ஒரு நிலை வந்து விட்டதே என மனவேதனையுடன் ராதா அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் ஒரு விஷயத்தை மட்டும் திரும்பவும் நினைவு படுத்துகிறது. சொத்து பிரச்சனை வந்தால் பெரிய குடும்பம், சின்ன குடும்பம் என்று வேறுபாடு இருப்பதில்லை.

சிவாஜி குடும்ப சொத்து பிரச்சனை

சிவாஜி குடும்பத்திலும் இதே மாதிரி ஒரு கட்டம் வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலும் சொத்து தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் வரை போனது. சிவாஜி கணேசனின் மகள்கள் தங்களுடைய சகோதரர்களான நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சொத்தில் உரிய பங்கு கொடுக்கவில்லை என்பதுதான் மகள்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

பிரபலங்களின் சொத்து பிரச்சனை

இதை பார்க்கும்போது ஒரு விஷயம் புரியும். சிவாஜி கணேசன் மாதிரி ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் கூட யாருக்கு எவ்வளவு? என்ற கேள்வி வந்ததும் உறவுக்குள் சட்டம் வந்து நிற்கிறது. அது மட்டும் அல்லாமல் நடிகை வனிதா விஜயகுமார் குடும்பத்திலும் இதேபோல சொத்து பிரச்சனை வந்தது. 2018ல் சென்னை அஷ்டலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டுக்காக விஜயகுமாருக்கும் அவருடைய மகள் வனிதாவுக்கும் இடையே சொத்து பிரச்சனை வந்தது.

அப்போது வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனால்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வெளியே வரும் போது வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு ஒரு வீட்டுக்காக இப்படியா? என்று தோன்றலாம். ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு அந்த வீடு வெறும் சொத்து கிடையாது. நினைவுகள், உரிமை, குடும்பத்தில் தனக்குள்ள இடம் எல்லாம் இருக்கும். அதனால் அதை தீர்த்துக் கொள்ள தான் பிரபலம் என்பதை தாண்டி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

பல குடும்பங்களில் நடப்பது

அதனால் தான் ராதா, அம்பிகா விவாகரத்தை பார்க்கும்போது இது சினிமா பிரபலங்களின் குடும்பத்தில் மட்டும் நடக்கும் ஏதோ வித்தியாசமான விஷயம் என்று பார்க்க வேண்டியதில்லை. நம்ம ஊரிலும் எத்தனை குடும்பங்களில் இதே கதை நடக்கிறது. வித்தியாசம் ஒன்றுதான் அவர்களுடைய சண்டை காவல் நிலையம் வரை போனால் செய்தியாகிறது‌. நம்ம வீட்டு சண்டை என்றால் அடுத்த வீட்டுக்காரர்களுக்கு உடனே தெரியும். சொத்து யாருக்கு கிடைத்தது என்பதை விட அந்த சொத்தை பிரிக்கும் போது ஒரு குடும்பம் எவ்வளவு பிரிந்து விட்டது என்பதுதான் சில நேரங்களில் பெரிய இழப்பாகி விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+