பாக்கியலட்சுமி: இனியா காதலை உடைத்த கோபி.. வீட்டை விட்டு துரத்தப்படும் செல்வி.. பாக்யா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்குமான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் காதலிக்கும் விஷயம் கோபிக்கு தெரியவர அதை குடும்பத்தில் சொல்லி விடுகிறார். அதனால் ஈஸ்வரி, செழியன் எல்லோரும் கோபத்தில் சண்டை போடுகிறார்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த திருப்பம் வந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாகவே இனியாவின் காதல் காட்சிகள் தான் சீரியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இனியா இனி குடும்பத்திடம் எப்போது சிக்குவார்? அப்போது பாக்கியாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாகவும், கேள்விகளாகவும் இருந்தது. அந்த தருணம் இப்போது வந்துவிட்டது.

Baakiyalakshmi Serial vijay TV

கோபிக்கு சந்தேகம்

இன்றைய எபிசோடில் இனியா தனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று காலேஜுக்கு சீக்கிரமா போக வேண்டும் என அவசரப்பட்டு கொண்டிருக்க, அந்த நேரத்தில் இனியாவின் போனுக்கு ஆகாஷ் நம்பரில் இருந்து சீக்கிரம் ஆக வந்துவிடு 8 மணிக்கு மீட் பண்ணனும் என்ற மெசேஜ் வருகிறது. அதை பார்த்து சந்தேகப்படும் கோபி நானே இனியாவை கொண்டு காலேஜில் விடுறேன் என்று காரில் கூட்டிக்கொண்டு போகிறார்.

மாட்டிக்கொண்ட இனியா- ஆகாஷ்

ஆனால் பாதி வழியில் காரில் இருந்து இறங்கும் இனியா எனக்கு இங்கே பொருள்கள் வாங்க வேண்டியது இருக்கு நான் இங்கிருந்து பிரண்ட்ஸ் உடன் காலேஜுக்கு போயிடுறேன் என்று சொல்கிறார். ஆனாலும் கோபி சந்தேகப்பட்டு காரை பக்கத்தில் நிறுத்திவிட்டு இனியா இறங்கிய இடத்திற்கு வருகிறார். அங்கு இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

புது ப்ரோமோ

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கோபியை பார்த்ததும் இனியா அதிர்ச்சியாகி நிற்க அப்போது கோபி என்ன இதெல்லாம் என்று கோபப்பட, அந்த நேரத்தில் ஆகாஷ் அங்கிள் என்று பேசப் போகிறார். அதற்கு கோபப்படும் கோபி அவரை முடக்கி விட்டு போகிறார். அங்கிருந்து இனியாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு கோபமாக வரும் கோபி பாக்யாவிடம் போனில் ஆதாரத்தை காட்டுகிறார்.

கோபத்தில் கோபி

பிறகு இந்த வீட்டில் கூட்டி பெருக்கி பாத்திரம் கழுவுறாளே செல்வி அவளோட பையன் ஆகாஷை தான் நம்ம வீட்டு பொண்ணு லவ் பண்றா என்று சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் செல்வி எப்போதும் போல வீட்டிற்கு அக்கா என்று வருகிறார். அவரை வழிமறிக்கும் ஈஸ்வரி, "நல்லவ போல இதுக்காகத்தான் இந்த வீட்டுக்குள்ள வந்தியா நீ ?"என்று கேட்க செல்விக்கு எதுவும் தெரியாமல் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு எதுவும் புரியல என்று சொல்கிறார்.

செழியன் கேட்ட கேள்வி

செழியன் கோபமாகி உங்க பையனுக்கு என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சி கூட பழகுவான் என்று கேட்கிறார். அப்போது ஈஸ்வரி இனிமேல் இந்த வீட்டுக்குள்ள வர வேலையே வச்சுக்காத என்று வீட்டை விட்டு துரத்துகிறார். வீட்டு வாசலில் நின்று கொண்டு செல்வி அழுது கொண்டிருக்கிறார். இந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாவம் செல்வி

ஆனால் இந்த ப்ரோமோவில் பாக்கியா எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கிறார். அதுபோல அந்த ப்ரோமோவில் இனியாவை யாருமே திட்டவில்லை. இனியா தனியாக நின்று கொண்டிருக்கிறார் ஆனால் இனி மொத்த குடும்பமும் பாக்யாவைதான் டார்கெட் செய்து பேசுவார்கள். ஈஸ்வரியை சொல்லவே வேண்டாம் நீ வேலை வேலைன்னு வேலைக்கு போனதால தான் உன் குழந்தைகளை பார்க்க முடியல. உன் பொண்ணை நீ சரியா வளர்க்கல என்று பழி போடுவார்.

Baakiyalakshmi Serial vijay TV

எப்படியும் பாக்யா தான் இனியா மற்றும் ஆகாஷ் கல்யாணத்தை குடும்பத்தை எதிர்த்து நடத்தி வைப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே செழியன் மற்றும் எழில் இருவருக்கும் பாக்கியா தான் கல்யாணம் பண்ணி வைத்தார். இப்போது செல்வின் மகன் ஆகாஷ் நல்லவர்தான் என்று இனியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார் என்று தான் தெரிகிறது.

வேலைக்காரர்களின் கஷ்டம்

இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று கடந்த மாதத்திலேயே தகவல்கள் வெளியானது. ஆனால் போகிற போக்கை பார்த்தால் இன்னும் சில மாதங்கள் கடந்து விடும். ஆனாலும் இப்போதைய ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் வேலை செய்பவர்களை நீங்க எங்க குடும்பத்தில் ஒருவர் என்று எல்லோரும் வாய் வார்த்தைக்காக தான் சொல்வார்கள்... ஆனால் செயலில் அப்படி எல்லாம் நினைக்கவே மாட்டார்கள் என்பதை இந்த பாக்கியலட்சுமி சீரியலில் காட்டியிருக்கிறார்கள்.

மனம் மாறுவாரா கோபி

கோபி தன்னுடைய குடும்பம் குழந்தைகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு போனார். இப்போது மனம் திருந்தி பாக்கியாவை புரிந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது இனியா செய்த செயலை பார்த்து கோபி கோபத்தில் பொங்குகிறார். இது என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+