திடீரென "முடிவுக்கு” வரும் விஜய் டிவி சீரியல்.. அதனால் தான் கதையில் இவ்வளவு வேகமா..? காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் அடுத்தடுத்த புது சீரியல்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீசன் 2 சீரியலும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வந்தது. மலையாள தொடரான "கருத்தம்மா" என்ற தொடரின் ரீமேக் ஆக பிரவீன் பென்னெட் இயக்கத்தில் பல வருடங்கள் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
முதல் சீசனுக்கு அதிகமான வெற்றி கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் உடனே ஆரம்பிக்கப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் விறுவிறுப்பாக கதை நகர்ந்து கொண்டிருந்தது. இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த அதே கண்ணம்மா அதாவது வினிஷா தேவி இந்த சீரியலிலும் கண்ணமாவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் முதல் சீசன் அளவிற்கு இந்த இரண்டாவது பாகத்தில் டிஆர்பி ரசிகர்களின் மத்தியில் கிடைக்காத காரணத்தால் நேரம் மாற்றி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாரதி, சௌந்தர்யாவுக்கு தெரியாமல் கண்ணம்மாவை திருமணம் செய்து விடுகிறார். இதனால் சௌந்தர்யா குடும்பம் பாரதி மீது கோபத்தில் இருக்கின்றனர்.

கண்ணம்மாவின் அப்பாவும் பாரதியின் குடும்பமும் இரண்டு பக்கமும் தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் இனி பாரதியும் கண்ணம்மாவும் எந்த மாதிரி வாழ்க்கையை தொடங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கதை வேக வேகமாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியல் பற்றி சில செய்திகள் வலம் வருகிறது.
அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் இந்த சீரியல் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விரைவில் கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக இருப்பதால் இந்த சீரியல் முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் உண்மையான நிலவரம் பற்றி சீரியல் அணியினர் எந்த உறுதியான தகவல்களையும் கொடுக்கவில்லை.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications