ரகசியமாக திருமணத்தை நடத்தி முடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.. மனைவி இந்த பிரபலம் தானா?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அகிலன் தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் அவருடைய பெயரிலேயே நடித்து வந்தார். ஆனால் சீரியலில் இருந்து பாதியில் விலகி சினிமாவில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை குறித்து எந்த அறிவிப்பும் விடாமல் இருந்த அகிலன் திடீரென்று திருமண புகைப்படங்களை வெளியிட்டு இப்போதுதான் எனக்கு திருமணம் ஆனது என்று கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சீரியலிலே அதிகமான முறை ட்ரெண்டிங்கில் இடம் பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்கும். இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும் பிறகு இதில் கண்ணம்மா கையில் பேக்கோடு வெளியே பல மாதங்களாக சுற்றிக் கொண்டிருந்ததை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

டி என் ஏ டெஸ்ட் என்ற ஒன்றை மைய புள்ளியாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வந்தாலும் இதற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் பாரதியின் தம்பி அகிலன் கேரக்டரில் நடித்து வந்தவர்தான் அகிலன். ஆனால் இவர் பாதியில் சீரியலை விட்டு நிறுத்திவிட்டு சினிமாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் விஷாலின் தங்கையை காதலித்த நபராக இவர் நடித்திருந்தார். சினிமாவில் இவர் அடுத்தடுத்து வெற்றி பெறுவார் என்று ரசிகர்களும் கூறி வந்தனர். அதே நேரத்தில் அதிகமான திரைப்படங்களில் அவர் காணப்படவில்லை. இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அட்ஷயா முரளிதரனை திருமணம் செய்து அவருடன் எடுத்த திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications