டி.என்.ஏ டெஸ்ட்டில் யாரும் எதிர்பார்க்காத பாரதியின் செயல்.. கடைசியில் ஹேமாவால் மாறிய கதை முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் இதுவரைக்கும் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் காக காத்துக் கொண்டிருந்த பாரதி இப்போது டெஸ்ட் முடிவில் யாரும் ஏமாற்றம் செய்து விடக்கூடாது என்று எடுத்த முடிவு மொத்த கதையையும் மாற்றப் போகிறது.
தன்னுடைய அப்பா யார் என்ற உண்மை லட்சுமிக்கு தெரியும் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா இனி எடுக்கும் முடிவால் அடுத்தடுத்த திருப்பங்கள் சீரியலில் முடிவை நோக்கி நகர்கிறது.

அதே கண்ணம்மா கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஆஸ்பத்திரியில் கண்ணம்மா பிரசவம் பார்த்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து புருஷனோடு சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பெண்மணி தன்னுடைய கணவர் டி.என்.ஏ ரிசல்ட் பார்த்த பிறகு அது நீ பணம் கொடுத்து உருவாக்கின ரிப்போர்ட் என சந்தேகப்படுகிறார். என்று தன்னுடைய கவலையை கூறிக் கொண்டிருக்கிறார். அங்கு எதார்த்தமாக வந்த பாரதி இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் .அந்தப் பெண் இனி அவரோடு சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். ஒரு பெண் செய்யாத தப்புக்காக சந்தேகப்படும் கணவரோடு வாழ வேண்டிய அவசியம் இல்லையே என்று பேசிக் கொண்டிருக்கிறார். கண்ணம்மா எந்த பதில் சொல்வது என்றே தெரியாமல் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரிசல்ட் காக காத்திருப்பு
கண்ணமாவும் அந்த பெண்ணும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பாரதி டெஸ்ட் ரிசல்டில் எந்த பிரச்சனையும் இனி ஏற்பட்டு விடக்கூடாது அதற்கு தகுந்த மாதிரி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல் டெஸ்ட் ரிசல்ட் யாரும் ஏமாற்றம் செய்து அதை மாற்றம் செய்து விடக்கூடாது அதனால் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறார். அடுத்ததாக தான் இதற்கு முன்பு வேலை செய்த மருத்துவமனையில் இருந்த வார்டு பாய்டம் பேசுகிறார். தனக்கு இலவசமாக மருத்துவத்தை பார்த்து வரும் பாரதிக்கு அவர் நன்றி கூறுகிறார். அதற்கு இதுவரைக்கும் அவர் நேர்மையாக விஷயத்தை செய்ததாகவும் அதற்காக என்னுடைய சிறு கைமாறு என்று பாரதி சொல்லும் போது வார்டு பாய் முகம் மாறுகிறது.

லட்சுமிக்கு உண்மை தெரிந்திருக்கு
இந்தப் பக்கத்தில் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் வீட்டில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹேமா தன்னுடைய அப்பா யார் என்று கேள்வியை மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதியிடம் கேட்டும் சொல்லவில்லை. கண்ணம்மாவிடம் கேட்டாலும் சொல்லவில்லை இனி என்ன செய்யலாம் என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டிருந்த ஹேமா இதற்கு முன்பு லட்சுமி இப்படித்தான் அப்பா யார் என்று கேட்டுக் கொண்டே இருந்தால் ஆனால் இப்போ அதை பத்தி அம்மாவிடம் கேட்கவே இல்லை நான் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அப்போ லட்சுமி கேள்விக்கு உண்மை தெரிந்திருக்கும் என்று தனக்கு தானே பேசி கொண்டிருக்கிறார்.

ஹேமா எடுத்த புது முடிவு
லட்சுமியின் கையை தன்னுடைய தலையில் வைத்து பொய் சொல்லாமல் சொல்லு லட்சுமி உனக்கு அப்பா யார் என்று தெரியும் தானே என கேட்க லட்சுமி தெரியும் ஆனால் அம்மா உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, என்கிட்ட கேட்டு தொந்தரவு பண்ணாத நானே அப்பா யாருன்னு கண்டுபிடிச்சேன். அதுபோல நீயே கண்டுபிடி அம்மா உன்னிடம் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கி இருக்காங்க, நீயும் என்கிட்ட சொல்லுன்னு சத்தியம் கேட்கிற நான் என்ன பண்ண ?என லட்சுமி கடுப்பாகிறார் .இதனால் ஹேமா அதிர்ச்சி அடைந்து இனி யாரிடமும் கேட்கக்கூடாது நானே கண்டுபிடிக்கிறேன் என முடிவு செய்கிறார்.

டெல்லிக்கு கிளம்பியாச்சி
அடுத்ததாக பாரதி டி என் ஏ டெஸ்ட் கிளினிக்கு போன் செய்து எப்போது ரிசல்ட் கிடைக்கும் என கேட்க இன்னும் இரண்டு நாட்களில் கிடைத்துவிடும் கிடைத்ததும் நான் உங்களுக்கு மெயில் அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறா.ர் ஆனால் முடியாது அதை பற்றி நான் டாக்டரிடம் பேச வேண்டும் என பாரதி கேட்க அப்போ நீங்க டெல்லிக்கு தான் செல்ல வேண்டும் என்று கிளினிக் டாக்டர் சொல்கிறார். உடனே பாரதி நான் அங்கே சென்று வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி ட்ராவல்ஸ் க்கு போன் செய்து டெல்லி செல்வதற்கு பிளைட் இருக்கிறதா என்று கேட்டுக் புக் செய்கிறார்.

உண்மையை சொல்லிறலாமே
அடுத்ததாக கண்ணம்மாவுக்கு போன் போட்டு சௌந்தர்யா ஹேமா எப்படி இருக்கிறார். பாரதியை மிஸ் பண்ணுகிறாளா என கேட்க அவர பத்தி பேசறது இல்ல ஆனா வேறு விதமாக அவரை பற்றி கேட்கிறா என சொல்ல சவுந்தர்யா குழம்புகிறார். பிறகு கண்ணம்மா ஹேமா தன்னுடைய அப்பா யாரு என கேட்கும் விஷயத்தை சொல்ல சௌந்தர்யா பாரதி தான் என்று உண்மையை சொல்ல வேண்டியது தானே என சொல்ல ஏற்கனவே பாரதி மேல ரொம்ப கோவமா இருக்கா இந்த நேரத்தில் இதை சொன்னால் அவர் மேல வெறுப்பு தான் வரும். இப்படியே போகட்டும் நேரம் வரும்போது சொல்லிக்கலாம் என கண்ணம்மா சொல்கிறார். சௌந்தர்யாவும் நீ சொல்றது சரிதான் அப்படியே பண்ணு என கூறி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications