கண்ணம்மா போட்ட பிளானால் உண்மையை உளறிய பாண்டி..வில்லனாக மாறிய பாரதி.. எதிர்பாராத சீரியல் கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாண்டியை ஆண்மை இல்லாதவன் என்று கூறியதால் ஊர்காரர்கள் அனைவரும் பாண்டியை கிண்டல் செய்கின்றனர்.

இறுதியில் கண்ணமாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தான் இதுவரைக்கும் செய்த அனைத்து செயல்களையும் ஊர்காரர்களின் முன்பு பாண்டி கூறிவிட்டார்.

கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாண்டிக்கு ஊர்காரர்கள் வற்புறுத்தல் வைக்கின்றனர்.

பாண்டியை அசிங்கப்படுத்தும் ஊர் மக்கள்

பாண்டியை அசிங்கப்படுத்தும் ஊர் மக்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாண்டி ஆம்பளையே கிடையாது அவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதால் கல்யாணமெல்லாம் செய்யாதே அந்த பெண்ணுடைய வாழ்க்கையை நாசமாய் போய்விடும் என்று கண்ணம்மா பேசிக் கொண்டிருக்க, ஊர்க்காரர்கள் எல்லாரும் பாண்டியை கிண்டல் செய்கின்றனர். பாண்டி நீ வெளியே தான் இப்படி சுத்திக்கிட்டு இருக்கியா? அப்போ சுத்த வேஸ்ட் தானா என கேள்வி எழுப்ப, கூட்டத்தில் இருக்கும் பெண்கள் நான் எல்லாம் இவனை கல்யாணம் செய்யவே மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மேடையில் இருக்கும் நாட்டாமை இடம் பக்கத்தில் இருக்கும் ப்ரோக்கர் முதலில் உங்கள் பையனுக்கு ஒரு வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு சென்று பாருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

உண்மையை உளறிய பாண்டி

உண்மையை உளறிய பாண்டி

அனைவரும் தன்னை கேவலப்படுத்துவதை பார்த்து பாண்டி கண்ணம்மா சொல்லுவது எல்லாமே பொய் அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவள் மீது என்னுடைய மூச்சு காத்து கூட பட்டது கிடையாது. நான் என்னுடைய மசாலா கம்பெனிக்கு அவளுடைய மசாலாவால் பிரச்சனை வந்ததால் நான் கண்ணம்மாவை பழி வாங்க வேண்டும் என்று இப்படி நடந்து கொண்டேன் என்று மொத்த சம்பவங்களையும் அனைவரிடமும் சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகி இந்த பாண்டியின் பேச்சை கேட்டு நாமும் கண்ணமாவை கேவலமாக பேசி விட்டோமே என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். பின்பு கண்ணம்மாவிடம் அனைவரும் மன்னிப்பு கேட்கின்றனர்.

கண்ணம்மாவின் அறிவுரை

கண்ணம்மாவின் அறிவுரை

அனைவர் முன்னிலையும் கண்ணம்மா தான் தப்பு செய்யாதவள் என்பதை நிரூபித்த பிறகு சமுதாயத்திலும் இப்படித்தான் தான் எந்த பெண்ணும் தப்பு செய்யாமல் சில பொறுக்கிகள் நம் பெயர் கெட்டு போனாலும் நம் மீது வீண் பழி வந்தாலோ அதை கண்டு பயப்படக்கூடாது. அதை துணிந்து போராட வேண்டும். நம் மீது தப்பில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். அனைவரையும் எதிர்த்து ஜெயிக்க வேண்டும் என்று மோட்டிவேஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்பு ஒரு பெண் கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றால் அதற்கு காரணம் அவள் யாரிடமாவது அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி இருப்பாள் என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பேசுவது தான் கேவலமான செயல். ஆண்கள் என்ன வேணும்னாலும் பேசிக்கொண்டு போகட்டும் ஆனால் பெண்கள் இனி யாரையும் இப்படி பேசாதீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

குஸ்தி போடும் பாரதி

குஸ்தி போடும் பாரதி

கண்ணம்மாவின் பேச்சை கேட்டு அனைவரும் தலை குனிந்த படி நிற்கும் போது பெண்கள் நாட்டாமையிடம் உங்கள் பையன் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்க என்று சொல்ல, நாட்டாமை பாண்டியிடம் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார், ஊர்காரர்களும் மன்னிப்பு கேட்க சொல்கின்றனர். ஆனால் பாண்டி நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல, பாரதி நான் கேட்க வைக்கின்றேன். உன்னோடு போட்டி போடுகிறேன் என்று கூறி குஸ்தி சண்டை போட தயாராகுகிறார் .நான் அடிக்கிற அடியில் கண்ணம்மாவிடம் பாண்டி மன்னிப்பு கேட்பார் என்று கூறி இருவரும் சண்டையிடுகின்றனர். மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது கடைசியில் தரையில் விழுந்த பாண்டி கீழே இருந்தா மண்ணை பாரதியின் கண்ணில் வீச, பாரதி நிலை தடுமாற பாண்டி பாரதியை அடித்து துவைத்து விடுகிறார். கடைசியில் பாரதி கீழே விழுந்து அசையாமல் கிடைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+