தூக்கத்தில் கண்ணம்மா பெயரை சொன்ன பாரதி.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. இனி நடப்பது இதுதான்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் தலையில் அடிபட்டு இருந்த பாரதிக்கு குடும்பத்தினர் அனைவரும் யார் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
திடீரென தூங்கிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மாவின் பெயரை பாரதி மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்.
கண்ணம்மா மீண்டும் பாரதியோடு பழகினால் தான் பாரதியால் பழைய நினைவுகளை கொண்டு வர முடியும் என்று டாக்டர் கூறியிருக்கிறார்.
பாரதியை காப்பாற்றுவதற்காக சௌந்தர்யா மற்றும் மொத்த குடும்பத்தினரும் கண்ணம்மாவிடம் கெஞ்சி மருத்துவமனைக்கு கண்ணம்மாவை கூட்டி வருகின்றனர்.

கண்ணம்மாவின் தவிப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாரதிக்கு பழைய நினைவுகள் ஞாபகத்தில் இல்லை என்று அவர் எல்லாத்தையும் மறந்து விட்டார் என டாக்டர்கள் சொல்கின்றனர். அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் வர நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறுகின்றனர். அனைவரும் இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சோகத்தோடு பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா பாரதிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

தூக்கத்திலும் கண்ணம்மா தான்
பாரதி உடம்பு சரி இல்லாமல் இருக்கும்போது அவருடைய உடல் நிலையை பற்றி விசாரித்தால் அத்தை ஏதும் நினைத்து விடுவார்களோ என்று குழப்பத்தோடு கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்கும் போது கடைசியாக ஒருமுறை பேசி பார்த்து விடுவோம் என்று சௌந்தர்யாவுக்கு போன் பண்ணுகிறார். சௌந்தர்யா கண்ணம்மாவின் குரலை கேட்டதும் கதறி அழுது கொண்டு பாரதிக்கு பழசு எல்லாம் மறந்து விட்டது என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்பு பாரதி தூக்கத்தில் கண்ணம்மா கண்ணம்மா என புலம்ப அதைக் கேட்டு நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடம் விஷயத்தை சொன்ன பிறகு எல்லோரும் பாரதியை பார்க்க போக பாரதி கண்ணம்மா கண்ணம்மா என புலம்பி கொண்டிருக்கிறார்.

கண்ணம்மா வரவேண்டும்
பிறகு டாக்டர் கண்ணம்மா யார் என்று கேட்க அவருடைய மனைவி என்று சௌந்தர்யா சொன்னதும் அவரை இங்கே கூட்டிக் கொண்டு வாங்க என சொல்ல, அவர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனர் என்று சொன்னதும், அந்த கண்ணம்மா வந்தால் மட்டும் தான் பாரதியை குணப்படுத்த முடியும் அவங்களை இங்கே கூட்டிட்டு வாங்க என்று பாரதியை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அவங்க இங்கே வரவேண்டும் என டாக்டர் சொன்னதும் பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி வீட்டிற்கு வருகிறார்.

நேரில் யாருன்னு தெரியலையே
கண்ணம்மாவின் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா பாரதியின் நிலைமையை கூறி கண்ணம்மாவை மருத்துவமனைக்கு அழைக்க முதலில் கண்ணம்மா நான் வரமாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருக்கிறார். பின்பு குழந்தைகளும் நீங்க போங்கம்மா அப்பா உன்னை பார்த்ததும் எல்லாமே அவருக்கு ஞாபகம் வந்துவிடும் என சொல்ல, சௌந்தர்யா உன்கிட்ட மடி பிச்சை கேட்கிறேன் என பேச கண்ணம்மா வாங்க போகலாம் என ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறார். அடுத்து ஹாஸ்பிடலில் பாரதி கண்ணம்மாவை பார்த்ததும் லைட்டாக சிரிக்க பாரதிக்கு ஞாபகம் வந்துவிட்டது என எல்லோரும் சந்தோஷப்பட பிறகு டாக்டர் இது யாருன்னு தெரியுதா? என கேட்டதும் பாரதி தெரியலை என சொல்ல அனைவரும் மீண்டும் அதிர்ச்சி ஆகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications