பாரதி கண்ணம்மா 2: மாஸ் என்று நினைத்து செய்துவிட்டு மன்னிப்பு கேட்ட கதாநாயகன்.. குவியும் கருத்துகள்
பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் சீனில் நடித்ததற்காக நடிகர் சிபு சூர்யன் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் பாரதி கேரக்டரில் நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் சில நாட்களுக்கு முன்புதான் ஒலிபரப்பு தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது நாள் எபிசோட்டில் சிபு சூரியன் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் சீனில் நடித்திருந்தார். அதை குறித்து தற்போது ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

இரண்டாவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் பலருக்கும் ஃபேவரைட் சீரியலாக இருந்து வந்தது. இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து அதிகமான நெகட்டிவ்ர்ஸ்களால் கலாய்க்கப்பட்டு வந்திருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் இருக்கத்தான் செய்தது. அதனால் தான் இந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி யின் முதல் இடத்தில் தொடர்ந்து இடத்தை பிடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நான்கரை வருடங்களாக ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீசன் முதல் பாகம் கடந்த வாரத்தோடு முடிவடைந்தது.

அர்ஜுன் சார்
இந்த நிலையில் இந்த வாரம் திங்கள் கிழமையில் இருந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூரியன் நடித்து வருகிறார். இவரை இதுவரைக்கும் சன் டிவியில் அர்ஜுன் சார் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்து நிலையில், தற்போது விஜய் டிவியில் இவர் பாரதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருக்கு இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

சிறப்பான விளக்கம்
அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பாரதி கண்ணம்மா சீசன் இரண்டில் பாரதி கிராமத்து பணக்கார வீட்டு பையனாகவும் அதுவும் குடித்துவிட்டு ஊர் சுற்றும் வாலிபராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய பிறந்த நாளில் சென்று குடித்துவிட்டு அங்கிருந்த ரவுடிகளோடு தகராறு செய்வது போல, கதை நகர்ந்து வருகிறது. இதில் அந்த கேரக்டரில் பாரதி நடித்திருந்தார். அதைக் குறித்து தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்கள் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பது நான் புரிந்து கொள்கிறேன். நான் எந்த வகையிலும் இவற்றை ஆமோதிப்பதில்லை. ஆனால் கேரக்டருக்காக தேவையானவற்றை பின்பற்றுகிறேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதை ரசிகர்கள் பலர் பாராட்டி வந்தாலும் சில நெட்டிசன்கள் செய்வதையும் செய்து விட்டு இதற்கு ஒரு விளக்கமா? என்று எப்போதும் போல வம்பு இழுக்கின்றனர்.

ரோஜாவின் பாராட்டு
இந்த நிலையில் சிபு வெளியிட்ட பதிவிருக்கு அவரோடு ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நல்கரி, லைக் கொடுத்திருக்கிறார். ரசிகர்கள், ரசிகர்களின் கவலைகளை புரிந்து கொண்டு இதை தெளிவு படுத்துவது எவ்வளவு மகிழ்ச்சி. நீங்கள் அதை கேரக்டரின் ஒரு பகுதியாக செய்தீர்கள் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். உங்கள் பொறுப்புணர்வை அத்தகைய காட்சிகளில் செய்வதற்கான கடின உழைப்பையும் பாராட்டுகிறோம் என்று பாராட்டி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications