பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்.. இதுதான் காரணமா..!? அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றில் கண்ணம்மாவின் பாட்டியாக நடிகை விஜயலட்சுமி நடித்து வந்தார்.
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலிக்காக பலமுறை இந்த சீரியலில் கண்ணம்மாவை பாடாய்ப்படுத்தி எடுத்த கேரக்டரில் நடித்திருந்தார்.

சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அந்த நிகழ்ச்சி வெற்றி அடையும் போது அங்கு நடிக்கும் நடிகர்களும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் இந்த பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றில் கண்ணம்மாவின் பாட்டியாக நடிகை விஜயலட்சுமி பிரபலம் அடைந்திருந்தார்.
ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொடுமைப்படுத்தும் கேரக்டரில் விஜயலட்சுமி அந்த சீரியலில் நடித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான கதை இல்லாத போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவருக்கு 70 வயது ஆகின்றது. இந்த நிலையில் அவருக்கு நல குறைவு ஏற்பட்டு அவர் திடீரென இன்று காலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இருக்கிறது.

சின்னத்திரை வெள்ளித்திரையில் அடிக்கடி பிரபலமானவர்கள் பலர் இப்போது அடுத்தடுத்து மரணமடைந்து வரும் வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விஜயலட்சுமியின் மரணமும் சின்னத்திரையில் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பத்துக்கு மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் சரவணன் மீனாட்சி பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். மேலும் சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்ததாகவும், அதனால் தலையில் பலமாக அடிபட்டதால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆகி வந்ததாகவும் தொடர்ந்து சோர்வாகவே இருந்த நிலையில் அவர் இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications