உட்கார வைத்து அசிங்கப்படுத்திட்டாங்க..அந்த வார்த்தை..!பாரதி கண்ணம்மா வினுஷா கண்ணீர் பேட்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகி ஆக நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் என்னை உட்கார வைத்து என்னை பற்றி பலர் கேவலப்படுத்தி பேசி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் கலரை குறித்து பலர் கிண்டல் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் தற்போது நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒளிபரப்பான முதல் பாகத்திலும் கண்ணம்மாவாக நடித்து வந்தார். இப்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். முதல் முறையாக வினுஷா எந்த சீரியலில் தான் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறாராம்.
மாடலிங் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்த வினுஷா தேவிக்கு இந்த சீரியலில் வாய்ப்பு கிடைத்ததும் பலர் இவர் பழைய கண்ணம்மா அதாவது ரோஷினி போலவே இருக்கிறார் என்று கூறி வந்தாலும், பலர் இவர் நல்லா இல்லை இவருக்கு பதிலாக வேறு நடிகையை மாற்றி விடுங்கள் என்றெல்லாம் கூறினார்கள். அதனால் எனக்கு மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்று தற்போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதோடு என்னுடைய நண்பரிடம் ஒருநாள் என்னை போட்டோ எடுக்க சொல்லி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் போட்டு இருந்தேன். பிறகு அவர் எனக்கு மாடலாக போட்டோ எடுத்து தர முடியுமா என்று கேட்ட, அப்படித்தான் நான் மாடலிங் வந்தேன். பிறகு அதுவே என்னுடைய வேலையாக மாறிவிட்டது. ஆனால் பலர் மாடலிங் போட்டோ சூட் எடுத்துவிட்டு அதற்கான பேமென்ட் தருவதற்கு கஷ்டப்படுகிறார்கள்.
நீங்க தான் அழகா இல்லையே எதுக்காக இவ்வளவு பணம் கேட்கிறீங்க என்று என் காது படவே பேசுகிறார்கள். என்கிட்டயும் சில நேரங்களில் கேட்கிறார்கள். நீங்கள் கருப்பாக இருக்கீங்க பெரிய அழகும் இல்லை ஆனால் அமௌன்ட் மட்டும் அதிகமா கேட்கிறீங்க என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சிலர் போட்டோ சூட் தானே வந்து எடுத்து கொடுத்துட்டு போகலாமே என்று கூட சொல்கிறார்கள். அது எப்படி சும்மா எடுத்துக் கொடுக்க முடியும். அதுதான் என்னுடைய வேலையாக இருக்கும்போது நான் எப்படி அப்படி செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதால் பலர் உங்களுக்கு வேற கதாநாயகி கிடைக்கவில்லையா இவரை மாத்தி விடுங்கள் என்றெல்லாம் அதில் கமெண்ட் பண்ணுவார்கள் எனக்கு அப்போ பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். பாரதிகண்ணம்மா சீரியலுக்கு பிறகு பல போட்டோ சூட் வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. அப்போ கூட நான் போகும்போது நீங்க கருப்பா இருக்கீங்க என்று சொல்வார்கள். நான் அது தெரிஞ்சு தானே நீங்க கூப்பிட்டீங்க, நான் சீரியலில் நடித்து இருக்கேன் தானே என்று கேட்டால் இல்ல நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்க என்று அடுத்த ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.
சில இடங்களில் என்னை கலராக காட்ட வேண்டும் என்று மேக்கப் போட வேண்டும் என்று கூறுவார்கள். அது எனக்கு கஷ்டமாக இருக்கும் நான் எந்த செமினாருக்கு போய் உட்கார்ந்தாலும் என்னுடைய கலர் டோனில் மேக்கப் போடுங்கள் என்று சொல்லுவேன். அதுபோல நான் கருப்பாக இருப்பதால் பல வாய்ப்புகளையும் இழந்து இருக்கிறேன்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications