வேட்டியை மடிச்சுக் கட்டி.. செம ஆட்டம் போட்ட பாவனா.. யாரும் முகத்தைப் பார்க்கலை போல!
சென்னை : வேட்டிய முட்டிக்கு மேலே தூக்கி கட்டி ஆர்யாவின் பாட்டுக்கு அட்டகாசமாக துள்ளிக் குதித்து ஆடியுள்ளார் டிவி தொகுப்பாளர் பாவனா.
ஆட்டம்னா இதுதான். வெறித்தனமா இருக்கே என்று ரசிகர்களும் கூட சேர்ந்து ஆடி கோலாகலமாக்கிக் கொண்டுள்ளனர்.
அதேசமயம், முகத்தைத் தவிர வேற எல்லாமே கலகலப்பா இருக்கேன்னு குசும்புத்தனம் செய்யவும் ரசிகர்கள் தவறவில்லை.

நல்லா தெரியுது
கோடு போட்ட சட்டையை பட்டனை கழட்டிவிட்டு முட்டிக்கு மேல வேட்டியையும் எடுத்து சொருகியபடி ஆர்யாவின் பாட்டுக்கு அமர்க்களப்படுத்தியுள்ளார் பாவனா. சூப்பரான டான்ஸ் இது.. சும்மா சொல்லக் கூடாது.. நல்லாவே ஆடியுள்ளார் பாவானா. இந்தப் பாட்டு எத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு பாவனா கேட்க அத்தனை பேரும் விழுந்து விழுந்து ரசித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர்
பாவனா ராஜ் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு தன்னுடைய திறமையின் காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும், வீடியோ தொகுப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் நடன கலைஞராகவும் ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் .இவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார்.

சலிக்காத குரல்
இவருடைய வசீகரிக்கும் குரலால் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கி இருக்கிறார் .அந்த நிகழ்ச்சிக்கு இடையில் தன்னுடைய காந்தக் குரலால் அடிக்கடி பாட்டு பாடியும் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறார். அதனாலேயே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த அளவிற்கு போரடிக்காமல் ரசிகர்களும் விரும்பிப் பார்த்து வருகின்றனர் .இவருடைய நடிப்பை பார்த்து தான் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி இருக்கின்றனர்.

இருவரில் இவர் ஒருவர்
அது மட்டும் இல்ல விளையாட்டு பத்திரிக்கையாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கமெண்டரி செய்த பெண்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது தொகுத்து வழங்கிய இரண்டு பெண் வல்லுநர்களில் ஒருவராகப் இவரும் இருந்திருக்கிறார். இதுவே இவருடைய பெரிய சிறப்பாக கருதப்படுகிறது .ஆண்களுக்கு இணையாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

தனித்துவமான திறமைதான்
இவருடைய குரல் வளமையை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்து வந்த ரசிகர்களுக்காக யூடியூப் சேனலில் பாட்டுப்பாடி வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடல்களும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது . என்னதான் இவர் டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் தற்போது இவர் போட்ட ஆட்டம் தான் இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறது. யாரும் எதிர்பார்க்காத காஸ்ட்யூமில் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

வேட்டியில் கலக்கல் குத்து
வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சார்பட்டா திரைப்படத்தில் இடம்பெற்ற ''வம்புல தும்புல மாட்டிக்காத" பாட்டுக்கு வேட்டிய மடிச்சு கட்டி வெறித்தனமான ஆட்டம் போட்டிருக்கிறார் .இந்த ஆட்டத்தைப் பார்த்து பலரும் பலவிதமாக கமெண்டுகளை போட்டு வந்து கொண்டிருந்தாலும் , எவனாவது முகத்தைப் பார்க்கிறானா என்று தான் பலரும் கமெண்டுகளை போட்டு வருகின்றனர் . அப்போ முகத்தை பார்க்காமல் அழகில் மெய்மறந்து இவருடைய ஸ்டெப்பை ரசிக்கிறார்களோ ரசிகர்கள்!!??.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications