அமீர் உளறிய அந்த வார்த்தை.. கடுப்பான பாவனி... இதனால் தான் திருமணத்திற்கு இடைவெளியா?

நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பாவனியிடம் கர்ப்பமாக இருக்கிறியா என அமீர் கேட்ட வார்த்தை தற்போது சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவனி சமீபத்தில் பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காதலர்களாக மாறி இருக்கும் அமீர் மற்றும் பாவனி இடம் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாவனியிடம் அமீர் நீ கர்ப்பமாக தான் இருக்கிறியா என்று கேட்டது தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலின் மூலம் ஏற்கனவே அனைவருக்கும் பிரபலமாக இருந்த நடிகை பாவனி இனையதளத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல் முதலாக பாவனிக்கு தான் அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் தொடங்கினார்கள். அதுவும் ஆரம்பமான புதியதில் இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இந்த நிலையில் கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய கடந்த கால கதையை கூறி பலரையும் கண்கலங்க வைத்து இருந்தார்.

பிக் பாஸில் அறிமுகம்

பிக் பாஸில் அறிமுகம்

அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக டான்ஸ் மாஸ்டர் அமீர் அறிமுகமானார். அறிமுகமான ஒரு சில நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்து வந்த அமீர் நாட்கள் செல்ல செல்ல பாவனியின் பின்னாடி சுற்று தொடங்கி விட்டார். அந்த நிகழ்ச்சியில் பலமுறை தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அமீர் என்னுடைய தம்பி என்று பாவனி அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிய நிலையில் இவர்கள் இருவரும் நிஜமாகவும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வந்தனர்.

துணிவு திரைப்படத்தில் நடிப்பு

துணிவு திரைப்படத்தில் நடிப்பு

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு கடைசியில் டைட்டில் ஜெயித்திருந்தனர். டைட்டில் ஜெயித்த அந்த நேரத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக தன்னுடைய காதலை அமீருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு அடிக்கடி இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அஜித் நடித்த துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக காதலர்களாக நடித்திருந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

என்னது கர்ப்பமா

என்னது கர்ப்பமா

அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் இவர்கள் இருவரும் அதிக நேரம் இருக்கும்படி ஒரு டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சிறிது நேரத்திலேயே தன்னால் முடியவில்லை என்று பாவனபாவனி கூறிவிட்டார். அப்போது பாவனிக்கு வாந்தி வந்திருக்கிறது. தலை சுற்றவும் செய்திருக்கிறது. முன்பு இவர்களிடம் ஒரு பேப்பரில் சைன் வாங்கி இருக்கின்றனர். அதில் முக்கியமாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு படித்துக் காண்பித்து கேட்ட பாவனியிடம் அமீர் நீ கர்ப்பமாகத்தான் இருக்கிறாய் ஆமாம் என்று போடு என்று சொல்ல, பாவனி அதிர்ச்சி அடைகிறார். நான் எங்க அப்படி இருக்கிறேன் என்று சொல்ல, எப்படியும் ஒரு நாள் கர்ப்பமாக தானே போகிறாய் என்று சொல்லி சமாளிக்கிறார். தற்போது இந்த கிளிப்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து நீங்கள் இருவரும் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று அறிவுரை கூறி வரும் நிலையில், அதற்கு அமீர் நாங்கள் இப்போதுதான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறோம்.

தற்போது சில வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் காதலர்களாக சுற்றி விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+