டாக்ஸிக் பட ப்ரொமோஷனில் ஏற்பட்ட பெரிய விபத்து.. 2 மாணவர்களுக்கு காயம்! யஷ் முன்பு என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யஷ் நடிப்பில் உருவாகி உள்ள டாக்ஸிக் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மல்லார் ரெட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியின் போது ஒலி மற்றும் ஒளி அமைப்பின் பகுதி திடீரெனில் சரிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாக்ஸிக் படம்

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் மீது ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. பல வருஷங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் இந்த படம் என்பதால் கேஜிஎப் 2 படத்திற்குப் பிறகு அவரது ரசிகர்கள் படத்துக்காக காத்திருந்தனர்.

Toxic Movie Yash Accident

ப்ரோமோஷன் நிகழ்ச்சி

இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட ப்ரொமோஷனை பிரம்மாண்டமாக நடத்த படகுழு முடிவு செய்தது. ஆகஸ்ட் 22 மாலை ஹைதராபாத்தில் மல்லார் ரெட்டி பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான மாணவர்களும் யஷ் ரசிகர்களும் அங்கு திரண்டனர்.

ரசிகர்கள் கூட்டம்

யஷ் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்ததும் உற்சாகம் உச்சத்தை அடைந்தது. கூட்டம் அதிகமானதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாட்டாளர்கள் திணறிய சமயத்தில் ஒருபுறம் யஷ் ரசிகர்களின் ஆரவாரம் மறுபுறம் மேடை மற்றும் சவுண்ட் சிஸ்டம் என நிகழ்ச்சி முழு வேகத்தில் சென்று கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திடீர் விபத்து

யஷ் மேடையில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சவுண்ட் பாக்ஸின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த 2 மாணவர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்து அனைவரும் பதட்டம் அடைந்துள்ளனர். குறிப்பாக காயம் அடைந்தவர்களில் ஒரு மாணவி மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் உடல்நிலை குறித்து முழுமையான மருத்துவ விவரங்கள் வெளியாகவில்லை. இதனால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+