For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிக்பாஸ் 2 : 10 இங்க இருக்கு... அப்போ மீதி 5 எங்க?

பிக்பாஸ் சீசன் 2 வீட்டில் உணவருந்தும் பகுதியில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிக்பாஸ் 2 செட்டில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்டுள்ள செட்டில், உணவருந்தும் பகுதியில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

    அப்படியானால், ஒரே சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பேரும் சேர்ந்து சாப்பிட நினைத்தால், மீதி ஐந்து பேர் நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும் போல.

    வரும் ஞாயிறு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீசன் 2. இந்த நிகழ்ச்சிக்காக முந்தைய சீசனுக்கு செட் போடப்பட்ட இடத்திலேயே பல புதிய மாறுதல்களுடன் கலர்புல் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.

    பந்திக்கு முந்துங்கோ

    பந்திக்கு முந்துங்கோ

    இந்தப் புதிய வீட்டில் உணவருந்தும் பகுதியில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில், உணவருந்தும் பகுதியில் குறைவான நாற்காலிகள் மட்டுமே உள்ளது ஏன் என சிந்திக்கத் தோன்றுகிறது.

    10 பேர் சிட்டிங்.. 5 பேர் ஸ்டாண்டிங்!

    10 பேர் சிட்டிங்.. 5 பேர் ஸ்டாண்டிங்!

    அனைவரும் எப்போதும் ஒரே நேரத்தில் உணவருந்தப் போவதில்லை என்றாலும், ஏதேனும் விருந்து உள்ளிட்ட சமயங்களில் அனைவரும் ஒரு சேர அமர்ந்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. அப்படியானால் அப்போது என்ன செய்வார்கள்?

    மியூசிகல் சேர் போல!

    மியூசிகல் சேர் போல!

    மியூசிகல் சேர் போல் விரைந்து நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டவர்கள் போக, மீதமுள்ளவர்கள் கையேந்திபவனில் நின்று கொண்டு சாப்பிடுவது போல், சாப்பிட வேண்டியது தான்.

     நிறைய கேள்வி இருக்குங்க பாஸ்!

    நிறைய கேள்வி இருக்குங்க பாஸ்!

    அதேபோல், முந்தைய சீசனில் ஆரம்பத்தில் பெரும்பான்மையான மீட்டிங்குகள் உணவருந்தும் மேடையில் வைத்து தான் நடைபெற்றது. அப்படி மீட்டிங் போடுவதென்றால் இப்போது என்ன செய்வார்கள்? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.


    English summary
    In the big boss house there are only ten chairs in the dining table. So how all the participants sit and dine at the same time?. This question is rising obviously.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X